பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலையிற் காணப்படும் தெய்வ வழிபாடுகளும் . . .

537


எனவரும் விழாவறை காதைத் தொடராகும். (மலைமகளா ராகிய உமாதேவியார் கண்புதைத்து விளையாடிய பொழுது உலகெலாம் இருள் மூடிய நிலையில்) "நெற்றியிலே புறப்பட்டுத் தோன்றிய நெற்றிக் கண்ணினையுடைய சிவபெருமான் முதலாகக் காவிரிப் பூம்பட்டினத்திலுள்ள சதுக்கப்பூதம் இறுதியாக வேறு வேறு விழாச் சிறப்பினையும் வேறு வேறு வழிபாட்டு முறையினையும் செய்யும் நெறியினையறிந்த பூசகர்கள் செய்வீர்களாக” என்பது இத்தொடரின் பொருளாகும். எனவே இத்தொடர் மணிமேகலைக் காப்பியம் இயற்றப்பெற்ற காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் முதலாகத் தமிழகத்திலுள்ள பேரூர்களிலும் சிற்றுார்களிலும் நிலவிய தெய்வவழிபாடுகள் எல்லாவற்றுள்ளும் நுதல்விழி நாட்டத்து இறைவனாகிய சிவபெருமானைப் பரவிப் போற்றும் சிவவழிபாடே முதன்மை பெற்று விளங்கிய திறத்தை நன்கு புலப்படுத்துதல் கானலாம்.

மதுரை நகரத்திலேயமைந்துள்ள திருக்கோயில்களிற்

காலைப் பொழுதில் வழிபாடு நிகழ்ந்த திறத்தைக் கூறும் இளங்கோவடிகள்,

“துதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும்

உவனச்சேவல் உயர்த்தோன் நியமமும் மேழிவலனுயர்த்த வெள்ளை நகரமும் கோழிச் சேவற்கொடியோன் கோட்டமும் அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் காலைமுரசம் கணைகுரல் இயம்ப"

(சிலப். ஊர்காண் 7-12)

என துதல்விழிநாட்டத் திறையோனாகிய சிவபெருமான் திருக்கோயிலையே முதன்மையுடையதாகக் குறித்துள்ளமை

இங்கு ஒப்புநோக்கத்தகுவதாகும்.

சாத்தனார் காலத் தமிழ் மக்களின் சமயப் பொதுநோக்கு

தமிழகத்தில் வாழ்ந்த சமயவாதிகள் பலரும் தத்தம்