பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


சைவவாதி தான் வழிபடும் சிவபரம்பொருளாகிய ஈசனது பொதுவியல்பினையும் சிறப்பியல்பாகிய உண்மை யிலக்கணத்தினையும் தொகுத்துக் கூறுவதாக அமைந்தது,

"இருசுடரோடு இயமானன் ஐம்பூதமென்

றெட்டுவகையும் உயிரும் யாக்கையுமாய்க் கட்டிநிற்போனும் கலையுருவினோனும் படைத்து விளையாடும் பண்பினோனும் துடைத்துத் துயர்தீர் தோற்றத்தோனும் தன்னில்வேறு தானொன்றில்லோனும் அன்னோன் இறைவனாகும்” (மணி. 27. 89-95)

எனவரும் பகுதியாகும். “ஞாயிறு திங்கள் என்னும் கதிர்கள் இரண்டுடன் வேள்வித் தலைவனாகிய ஆன்மா, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பெரும் பூதங்கள் ஆகிய எண்வகைப் பொருள்களிலும் தான் அவற்றின் உயிர் போன்று ஊடுருவிக் கலந்தும், அவையெல்லாவற்றுக்கும் தானே உடம்பாக அவற்றையெல்லாம் தனக்குள் அடக்கிக் கொண்டு அவற்றின் மேற்பட விரிந்தும் பிரிவின்றி உலகுயிர்களைப் பிணித்து நிற்பவனும், எல்லாக் கலைகளையும் தனது உருவாகயுடையவனும், உலகெலாம் படைத்து (மன்னுயிர்கட்கு இன்பம் விளைய) ஆடல் புரிந்தருளும் அருட்பண்பினையுடையவனும் உலகங்களை யெல்லாம் அழித்து ஒடுக்குந்திறத்தால் (உயிர்களின்) துயரத்தைத் தீர்த்தருளும் உயர்ச்சியையுடையவனும், தன்னையின்றித் தனித்து நிற்கும் பொருள் வேறொன்றும் இல்லை யென்னும்படி எல்லாப் பொருட்குஞ் சார்பா யுள்ளவனும் ஆகிய அத்தன்மையுடையவனே உலகுயிர்கட்கு இறைவனாவன்” என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும்.

சைவவாதியின் கூற்றில் இடம்பெற்றுள்ள சைவ சமய வுண்மைகள்

சைவவாதியின் சமயக் கொள்கையினைக் குறிக்க

எண்ணிய மணிமேகலையாசிரியர் சாத்தனார் இறைவன் ஈசன் என நின்ற சைவவாதி என அடைமொழி புணர்த்துக்