பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

572

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


“என்னை நன்றாக இறைவன் படைத்தவன்

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” (திருமந் 81)

எனவும் மேல் எடுத்துக்காட்டிய திருமூலர் வாய்மொழி களாலும் நன்குணரப்படும்.

மூவாயிரந் திருப்பாடல்களையுடைய திருமந்திரத்தில் காப்புச் செய்யுளோடு சேர்த்து 3048 பாடல்கள் உள்ளன. இவையன்றிப் பிறநூலுரைகளில் மேற்கோளாகக் காட்டப் பட்டு இந்நூலுட் சேர்க்கப்படாதவை 11 பாடல்கள். ஏட்டுச் சுவடிகளிலிருந்து வெளிவராதன வாய்ச் சைவசித்தாந்த சமாசப் பதிப்பிற் காட்டப்பெற்ற பாடல்கள் 17. இவற்றின் மேலாக வெள்ளியம் பலவாணத் தம்பிரான் சுவாமிகளால் ஞானாவரனபாடியத்திலும் முத்திநிச்சயப் பேருரையிலும் காட்டப்பட்ட திருமந்திரப் பாடல்களில் இதுவரை வெளிவராதன ஏறக்குறைய 30 திருப்பாடல்கள். இவை யெல்லாவற்றையும் சேர்த்து எண்ணுங்கால் திருமந்திரத்தின் பாடற்றொகை மூவாயிரத்து நூறு என்னும் என்னையும் கடந்துவிடும். இவ்வாறு திருமந்திரப்பாடல்கள் மூவாயிரத்துக்கும் மேலாக மிகுந்து காணப்படுதற்கு, இவற்றுட்சில இந்நூலில் இருமுறையும் மும்முறையுமாக இடம்பெற்றிருத்தலும், சில பாடல்கள் பாடபேதங்களால் உருத்திரிந்து வெவ்வேறு பாடல்களாக எழுதப் பெற்றிருத்தலும் இவ்வருள் நூலின் யாப்பினை யடி யொற்றிப் பிற்காலத்திற் பாடப்பெற்ற பாடல்கள் சில யாப்பு ஒப்புமை பற்றித் திருமந்திரம் என்ற பெயராற் குறிக்கப் பட்டிருத்தலும், அவற்றுட் சில இந்நூலினுள்ளே இடைச் செருகலாக இடம் பெற்றிருத்தலும் காரணங்களாகும்.

திருமூலநாயனார் இத்திருமந்திரமாலையை 'ஒன்றவன்றான்' என்ற திருப்பாடலை முதலாகக் கொண்டு தொடங்கி மூவாயிரம் திருப்பாடல்களால் நிறைவேற்றி யருளினார் என்பது,

"ஏனவெயிறணிந்தாரை ஒன்றவன்றான்’ என் றெடுத்து”, “முன்னிய அப்பொருண்மாலைத் தமிழ் மூவாயிரஞ்சாத்தி” எனவரும் சேக்கிழார் வாய்மொழிகளால்