பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

647


கருத்தாகும்.

ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே, ஏ.யும் உயிர், மாமாயை ஈன்றிட மாயை கைத் தாயாகக் கேவலத்தின் (நீங்கிச்) சகலத்து எய்தி ஆய்தரு சுத்தமும் தான் வந்து அடையும் என இயையும். மாமாயை சுத்தமாயை. மாயைஅசுத்தமாயை. கைத்தாய் - செவிலித்தாய் .

ஆன்மதரிசனம் செய்யும் உபாயம் உணர்த்துவது,

“பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்

தன்னை மறைத்தது தன் கரணங்களாந் தன்னின் மறைந்தது தன் கரணங்களே” (2289)

எனவரும் திருமந்திரமாகும்.

“பொன்னால் இயன்ற அழகிய அணிகலம் அரிைகலம் என்ற வடிவில் தன்னைக் காண்பார்க்குத் தனக்கு முதற்காரணமானது பொன் என்னும் உண்மையினை உலகத்தார் காணாதவாறு தன் வினைத் திறத்தால் பொன்னை மறைத்து விட்டது. அவ்வணிகலத்தில் மேற்பட்டுத் தோன்றும் தொழில்நுட்பத்திற் கருத்தைச் செலுத்தாமல் அதற்கு முதற்காரணமாவது யாது எனக் கூர்ந்துணர்வார்க்கு அவ்வணிகலத்தின் வடிவம் தனித்துத் தோன்றாமல் பொன் என்ற அளவிலேயே அதற்குள் அடங்கி மறைந்தது. அது போல, ஆன்மாவாகிய தன்னை மறைத்தது தன்கரணங்க ளாகிய மாயேயம். (நானார் என்னுள்ளமார் எனக் கூர்ந்து நோக்கிய நிலையில்) தன்னுடைய கருவிகரணங்களாகிய அத்தொகுதியானது ஆன்மாமேற்பட்டுத் தோன்ற அதன் வியாபகத்துள் அடங்கி மறைந்தது என்பது இதன் பொருள்.

ஆன்மா தனுகரணங்களே தானாகப் பேதமின்றி எண்ணிய நிலையில் ஆன்மா என்னும் சித்துப்பொருள் மறைய அது பெற்றுள்ள கருவிகரனங்களாகிய சடப் பொருளே மேற்பட்டுத் தோன்றுவதாம். அவற்றைச் சடம் என உணர்ந்த நிலையில் ஆன்மாவாகிய சித்துப் பொருளின் வியாபகமே மேற்பட்டுத் தோன்றத் தன்னியல்பினை உள்ளவாறு உணர்தலாகிய ஆன்மதரிசனம் உளதாகும்