பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/674

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

666

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


றெண்ணினார்க்கிடமா வெழில் வானகம் பண்ணினாரவர் பாலைத் துறையரே'

எனத் திருநாவுக்கரசு நாயனாரும்,

“நண்பாற் சிவாயவெனா நாலூர் மயானத்தே

இன்டாயிருந்தானை யேத்துவார்க் கின்பமே.” (2.46.10)

எனத் திருஞானசம்பந்தப் பிள்ளையாரும் அருளிய திருப் பாடல்களில் அதிசூக்கும பஞ்சாக்கரம் உபதேசிக்கப் பெற்றுள்ளமை உணர்ந்து போற்றத் தகுவதாகும்.

“உடையாள் உன்றன் நடுவிருக்கும்

உடையாள் நடுவுள் நீயிருத்தி

அடியேன் நடுவுள் இருவீரும்

இருப்பதானால் அடியேன் உன்

அடியார் நடுவுள் இருக்கும்

அருளைப்புரியாய் பொன்னம்பலத்தெம்

முடியா முதலே என்கருத்து

முடியும் வண்ணம் முன்னின்றே” (கோயில்மூத்த,1)

எனவரும் திருவாசகம் “சத்தியும் சிவமும் ஒத்திருபாலுற, முத்தியாரும் முறைமையருளிய உண்மையை அறிவுறுத்துவது” என்பர் சீகாழித் தாண்டவராயர்.

இறைவன் செய்தருளும் ஞானமயமான திருக்கூத்தின் இயல்பினை விரித்துரைக்கும் அற்புதக்கூத்து என்னும் தலைப்பில் அமைந்தது,

"நெற்றிக்கு GEG புருவத் திடைவெளி உற்றுற்றுப்பார்க்கவொளிவிடு மந்திரம் பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடஞ் சிற்றம்பலமென்று தேர்ந்துகொண்டேனே' (2770)

எனவரும் திருமந்திரமாகும். திருமூலதேவநாயனார் அற்புதத் திருக்கூத்தினைத் தாம் கண்டு தரிசித்த திறத்தை இத் திருப்பாடலால் அருளிச் செய்கின்றார்.

"நெற்றிக்கு நேரே இருபுருவங்களின் இடைவெளி