பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/713

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

705


நேரியனாய்ப்பரியனுமாய் உயிர்க்குயிரா யெங்கும்

நின்றநிலை யெல்லாம்முன் நிகழ்ந்து தோன்றும்”

(சுபக். 280)

எனவரும் சிவஞான சித்தியார் திருவிருத்தமாகும்.

சிவனுடைய அருளிடமாக நின்று ஆன்மசுத்தி பண்ணினவர்கள், தத்துவம் முப்பத்தாறோடும் கூடி நிற்கும் பொழுதே அவற்றோடு கூடிச் சீவிப்பதுஞ் செய்யாமல் அறிவு குலைவதும் செய்யாமல் சிவத்துடன் ஒன்றிநிற்கும் நிலையே சாக்கிரத்தில் அதீதம் எனப்படும் தெளிவுநிலையாகும் இதனை அறிவிப்பது,

“பொற்புறு கருவியாவும் புணராமே, அறிவிலாம்ற்

சொற்பெறும் அதீதம் வந்து தோன்றுமே, தோன்றிநின்ற சிற்பரமதனால் உள்ளச் செயலறுத்திட உதிக்கும் தற்பரமாகி நிற்றல் சாக்கிராதிதந் தானே.” (8)

எனவரும் சிவப்பிரகாசச் செய்யுளாகும். இதன் கண் குறித்தவாறு தத்துவம் முப்பத்தாறும் நீங்கியதே முத்தி யென்பதற்கு

'முப்பதும் ஆறும் படிமுத்தியேணியாய்

ஒப்பிலாப் பேரண்டத்துள்ளில் வெளிபுக்குச் செப்பவரிய சிவங்கண்டு தான்தெளிந் தப்பரி சாகி அமர்ந்திருந் தாரே” (126)

எனவரும் திருமந்திரத்தை உதாரணங்காட்டுவர் மதுரைச் சிவப்பிரகாசர், ஆன்மா ஆணவத்தால் மறைப்புண்டு அறியாமையாய்க் கிடப்பதுஞ்செய்யாமல், அகக்கரண்ம் புறக்கரணங்களோடுங்கூடிச் சகலனாய்ச் சத்தாதி விடயங்க ளோடும் கூடிச் சிவிப்பதுஞ் செய்யாமல் நின்ற இடமே சாக்கிராத்தம் என்பதற்கு,

“நினைப்பு மறப்பு மிலாத விடத்தே

வினைப்பற்றறுக்கும் விமல னிருப்பன் வினைப்பற்றறுக்கும் விமலனை நாடி நினைக்கப்புகிலவன் நீளிய னாமே” (2970)

சை. சி. சா. வ. 45