பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/738

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

730

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


(இரண்டற) ஒன்றும்நெறி என வழங்குதல் பொருந்தும், நால்வகை நெறிகளின் இயல்பினையும் பயனையும் சிவஞான சித்தியார் எட்டாஞ்சூத்திரத்தில் வரும் 18 முதல் 22 வரை யுள்ள திருவிருத்தங்கள் விரித்துரைக்கின்றன.

மக்கள் விரும்பிச் செய்தற்குரிய வேள்விகள் கன்ம வேள்வி, தவவேள்வி, செபவேள்வி, தியானவேள்வி, ஞான வேள்வி என ஐந்தாகும். இவற்றுள் முற்கூறப்பட்ட நான்கும் போகத்தையூட்டுவன. ஓதல், ஒதுவித்தல், கேட்டல், கேட்பித்தல், சிந்தித்தல் என ஐவகையாகக் கூறப்படும் ஞான வேள்வி ஒன்றுமே உயிர்கட்கு வீடுபேற்றை அளிக்கவல்லது. இதனை,

'ஞானநூல்தன்ையோதல் ஒதுவித்தல்

நற்பொருளைக் கேட்பித்தல், தான்கேட்டல், நன்றா

ஈனமிலாப் பொருள் அதனைச் சிந்தித்தல் ஐந்தும் ജൂണുഖങ്ങ. அடைவிக்கும் எழில்ஞானபூசை

ஊனமிலாக் கன்மங்கள் தபம் செபங்கள் தியானம்

ஒன்றுக்கொன்று உயரும் இவை ஊட்டுவது போகம்

ஆனவையான் மேலான ஞானத்தால் அரனை

அருச்சிப்பர் வீடெய்த அறிந்தோர் எல்லாம்”

என்ற பாடல் அருணந்தி சிவனார் அறிவுறுத்தியுள்ளார்.

ళ 4. > «9 *५ * $ . 33 ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்

(6.18.3)

எனவரும் நாவுக்கரசர் வாய்மொழி இங்கு நினைத்தற் குரியதாகும்.

மேற்குறித்த நால்வகை நெறிகளுள் தாதமார்க்கத்து இயல்பு திருநாவுக்கரசரிடத்தும், சற்புத்திர மார்க்கத்து இயல்பு திருஞானசம்பந்தரிடத்தும், சகமார்க்கத்தியல்பு நம்பியாரூரரிடத்தும் சன்மார்க்கத் திறம் மாணிக்கவாசக ரிடத்தும் அன்னோர் தம் வரலாற்று நிகழ்ச்சிகளில் வெளிப்பட்டு விளங்குதல் காணலாம்.

சரியை வழி நின்றவர் அப்பர் எனவும், கிரியை வழி