பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/739

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

731


நின்றவர் சம்பந்தர் எனவும், யோக நெறி நின்றவர் சுந்தரர் எனவும், ஞானநெறி நின்றவர் மானிக்கவாசகர் எனவும் கூறுதல் உண்டு. ஆயினும் சைவ சமய குரவராகிய இந்நால்வ ரும் எல்லாம் வல்ல இறைவனருளால் சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் கைவரப்பெற்று முதிர்ந்த ஞான நெறியில் நின்ற செம்புலச் செல்வர்களே என்பது சேக்கிழார் முதலிய அருளாசிரியர்களின் துனிபாகும்.

இறைவன் எல்லாமாய் அல்லதுமாய் நிற்கும் இயல்புடையவன் எனவும், அம் முதல்வன் நம்மனோர்க்கு அருள்செய்யும் பொருட்டு "மலைமகள் பாகமாக அருள் காரணத்தின் வருவார்’ என்றபடி அருளே திருமேனியாக அவ்வப்பொழுது அடியார்கள் விரும்பிய திருமேனியினைக் கொண்டு தோன்றி அருள்புரிவன் எனவும் தேவாரம் கூறும். நின்ற திருத்தாண்டகம் முதலிய திருப்பதிகப்பாடல்கள் இறைவனது எல்லாம் ஆகிய நிலைமையையும் மண் னல்லை விண்ணல்லை’ என்பது முதலிய பாடல்கள் அவன் அல்லனாய் நிற்கும் நிலைமையையும் உணர்த்துவன. இறைவன் உருவம் அருவம் அருவுருவம் என்று சொல்லப் படும். மூவகையுள் ஒன்றிலும் அடங்காதவனாய் அப்பாற் பட்டு நிற்கும் இயல்பினன் ஆதலின் அம்முதல்வனை அம் மூவகையுள் அடக்கி உரைத்தல் பொருந்தாது என்பதனை 'எந்தையாரவர் எவ்வகையார் கொலோ (3.54.3) எனவரும் தொடரில் ஞானசம்பந்தப் பிள்ளையார் குறிப்பிட்டுள்ளமை கானலாம்.

வேதம் பசுவாகவும், சிவாகமம் பாலாகவும், நால்வர் ஒது தமிழாகிய திருமுறைகள் நெய்யாகவும் அமைய அந்நெய்யின் உறுசுைைவயாக அமைந்ததே மெய்கண்டா ரருளிய சிவஞான போதமாகும்.

திருமுறைக்கும் சிவஞான போதத்திற்கும் உள்ள இத் தொடர்பினைப் விரித்துரைப்பது,

“வேதம்பசு.அதன்பால் மெய்யாகமம் நால்வர்

ஒதுதமிழ் அதனின் உள்ளுறு நெய் - போதமிகு