பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/745

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

737


ஆதாரமாகக் கொண்டுள்ளது என்பது,

"படிக்கொள் சேவடியான்”

என ஆளுடையபிள்ளையாரும்,

“முந்தாகி முன்னே முளைத்த அடி”

(திருவடித் திருத்தாண்டகம்)

§4. לל நடுவாயுலக நாடாயவடி

என ஆளுடைய அரசரும் அருளிய அருண்மொழிகளால் நன்கு புலனாம். படி - உலகம். படிக்கொள் சேவடி - உலகங்களைத் தன்கண்ணே அடக்கிக் கொண்ட சிவந்த திருவடி என்றது இறைவனது சத்தியினை.

கிழங்கினின்றும் முள்ைத்த தாமரையை அக் கிழங்கிற்கு ஆதாரமாகிய சேற்றினின்றும் முளைத்தது (பங்கசம்) என்றாற்போல உலகு அவனுருவிற் றோன்றி யொடுங்கிடும் (சித்தியார் 1, 32) என்பர் பெரியோர்.

வேண்டுதல் வேண்டாமையிலானாகிய இறைவன் படைப்பு முதலிய தொழில்களைச் செய்வானாயின் அத்தொழில் பற்றி விகாரமுறுவன் அல்லனோ என வினவு வாரை நோக்கி, கருவி கரணங்களால் வினைசெய்வாரே அவ் வினையால் விகாரப்படுவர். இறைவன் கருவி கரணங்களா லன்றிக் காலத்தத்துவம் போன்று ஒன்றினுந்தோய்வின்றி நினைவளவானே அத்தொழில்களைச் செய்ய வல்லானாத லின் அவற்றால் விகாரமடைதல் இல்லை என அறிவுறுத்துவது,

“நோக்காது நோக்கி நொடித்தன்றே காலத்தில்

தாக்காது நின்றுளத்திற் கண்டிறைவன் ஆக்காதே கண்டநனவுணர்விற் கண்ட கனவுணரக் கண்டவனில் இற்றின்றாங்கட்டு” (சிவ. 1. 4)

எனவரும் உதாரண வெண்பாவாகும். "இறைவன் இறப்பு நிகழ்வு எதிர்வு முதலியனவாய் வேறுபட்டு எல்லாத் தொழிலும் செய்தும் தனக்கு விகாரமின்றி நிற்கும் காலம்

சை. சி. சா. வ. 47