பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/755

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

746

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


"ஏகமாய்த் தம்கால எல்லைகளின் மீளும்

எண்ணரிய சத்தியதாய் இருளொளிர இருண்ட மோகமாய்ச் செம்பினுறு களிம்பேய்ந்து நித்த மூலமலமாய் அறிவு முழுதினையும் மறைக்கும்”

(சிவப். 20)

எனவரும் சிவப்பிரகாசத் திருவிருத்தத்துள் உமாபதி சிவாசாரியார் சுருக்கமும் தெளிவும் பொருந்த விளக்கியுள்ளார்.

எண்ணிறந்த சத்திகளால் எண்ணிறந்த உயிர்கள் தோறும் செம்பிற்களிம்பும் நெல்லின் உமியும் போலத் தோற்றமில் காலமாக விரவி நிற்பதொன்றாய், கேவல நிலையில் அவ்வுயிர்களின் அறிவொடு தொழிலைமறைத்து, சகலநிலையில் போக நுகர்ச்சிக்கு வினை முதலா தல் தன்மையை நிகழ்த்தி, அறியாமை நிகழ்ச்சிக்குக் காரணமாய் நிற்பது ஆணவமலம் ஆகும். இது வியாபகமாகிய உயிரை அணுத்தன்மைப்படுத்து மறைப்பதாகலின் ஆணவம் என்னும் பெயருடையதாயிற்று. இது பாசப்பிணிப்பிற்கு மூலமாய் உயிரைப்பிணித்து நிற்றலின் பசுத்துவம் எனவும் வழங்கப் :படும். உயிர்களை அறியாமையிருளிற் படுத்துமறைப்ப தகவின் இதனை இருள் மலம் எனவழங்குதல் தமிழ் மரபு. இனி, கன்மம் என்பது ஆணவம் காரணமாக உயிர்க ளிடத்துத் தோன்றும் விருப்பினையுடையதாய்ப் போக நுகர்ச்சிக்கு ஏதுவா உயிரைப் பிறவியுட்படுத்துவதாகும். கன்ம மலழாகிய இதனது இயல்பு, “மொய்த்திருண்டு பந்தித்து நின்ற பழிவினை” எனவரும் அப்பர்தேவாரத்தில் விளக்கப்பெற்றுள்ளமை காணலாம். "எண்ணரிய சத்தி யுடைய உயிர்களின் அறிவொடு தொழிலை ஆர்த்துப் பந்தித்து நிற்கும் இருள் மலத்தால் உளவாகிய பழவினை என்பது இத்தொடரின் பொருளாகும். மாயை என்பது ஆடையிற் படிந்த அழுக்கினை உவர் மண்ணைக்கொண்டு கழுவுதல் போன்று உயிரினைப்பற்றிய ஆனவ அழுக்கினை அகற்றுதற்பொருட்டு இறைவனால் உயிர்களுக்குக் கொடுக்கப்பட்டு அவற்றிற்குச் சிறிது அறிவுநிகழ்ச்சியை விளைப்பதாகும்.