பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/786

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

777


நெற்றிக்கமலம் தியானத்தானமாகவும் அமைய அகப்பூசை யினை முறைப்படி செய்து இம் மூன்றிற்கும் மேலாய் மீதானம் எனப்படும் தலையினது உச்சியாகிய பிரமரந்திரப் பெருவெளியிலே தம்முயிரைச் செலுத்திக் கலந்து இன்புறும் நிலையில் நாலாந்தானமாகிய அவ்விடத்திலே ஆயிரவிதழ்த் தாமரையிலே அம்மையப்பராக இறைவர் எழுந்தருளி யிருப்பார் என்பார் 'தாரத்தின்.........நாற்றானத்தேயிருப்பர்’ (திருக்களிற்றுப்படியார்-79) என்றார் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார். ஆறாதாரங்களாகிய மூன்று மண்டலங் களையும் கடந்து நாலாவது தானமாகத் திகழ்வது உச்சிப் பெருவெளியாதலின் அது நாற்றானம் என வழங்கப் பெறுவதாயிற்று. இப்பெயர் வழக்கம், நாற்றானத் தொருவனை நானாயபரனை (7-38-4) எனச் சிவயோகியா ராகிய நம்பியாரூரர் பாடலில் நிலைபெற்றுள்ளமையும் இந்நிலையினை ‘நாலாம் நிலத்தின் நடுவான பொருள்' (திருமந்திரம்-840) எனத் திருமூலநாயனார் குறித்துள்ள மையும் இங்கு ஒப்புநோக்கியுணரத்தக்கனவாகும்.