பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/836

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

827


தாம் செய்த நல்வினை தீவினைகளின் பயனைத் தாமே அறிந்து எடுத்துக்கொண்டு நுகரும் உணர்வுவன்மையும் வினைப்பயன்களாகிய இன்ப துன்பங்களின் விருப்பு வெறுப்பற்ற தன்மையும் உயிர்களுக்கு இல்லை. செய்த வினைப்பயன்களைச் செய்த உயிர்களே நுகரும்படி சென்று சேரும் உணர்வு வின்ைக்கு இல்லை . எனவே உயிர்கள் செய்த வினைப்பயன்களை அவ்வவ்வுயிர்களே நுகந்து கழிக்கும்படி வரையறுத்து நுகர்விப்பவன் இறைவன் என்பது சைவ சமயச் சான்றோர் துனிபாகும். உயிர்களுக்கு உலகு உடல் கருவி நுகர்பொருள்களைப் படைத்தளிப்பவன் இறைவன் ஆதலால் அம்முதல்வனே எல்லாப் பொருள் களையும் தனக்கு உடைமையாகக் கொண்டுள்ள உடையான் என்றும், உலகம் பொருள்கள் யாவும் அவனது உடைமை என்றும், உணர்வுடையனவாகிய உயிர்கள் ஆண்டவனாகிய, அவனுக்கு அடிமை என்றும் உணர்ந்து அம்முதல்வனது திருவருள் வழி அடங்கி நடத்தலே மெய்யுணர்வுடையோர் செயலாகும். இதனை,

ę*

எப்பொருளும் ஆக்குவான் ஈசனேயெனு முணர்வும் அப்பொருள்தான் ஆளுடையான் அடியார்கள் எனுமறிவும் இப்படியால் இதுவன்றித் தம்மிசைவு கொண்டியலும் துப்புரவில்லார் துணிவு துகளாகச் சூழ்ந்தெழுந்தார்”

(பெரிய, சம்பந்தர். 71) எனவும்,

"தம்மையுள்ள வாறறிந்தபின் சங்கரற் கடிமை

மெய்ம்மையே செயும் விருப்புடன் மிக்கதோரன்பால் பொய்ம்மை நீங்கிய பொருளிதுவெனக்கொளும் பொற்பால் செம்மையேபுரி மனத்தினார் சிவநேசரென்பார்”

(பெரிய. சம்பந்தர். 1085)

எனவும் வரும் திருப்பாடல்களில் சேக்கிழாரடிகள் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார். தம்மையுள்ளவாறறிந்தபின் என மேற்குறித்த பெரியபுராணச் செய்யுட்பொருளை அடியொற்றியமைந்தது.

"தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்

எம்மையுடைமை யெமையிகழார் - தம்மை