பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும்...

83


மகிழ்தலே அவ்விருவரும் இதுகாறும் அன்பினால் நிகழ்த்திய மனைவாழ்க்கையின் முடிந்த பயனாகும் என்பது ஆசிரியர் தொல்காப்பியனார் அறிவுறுத்தியருளிய மெய்யுணர்வுக் கொள்கையாகும். தமிழ் முன்னோர் வீடுபேற்று நெறிபற்றிய இக்கொள்கை,

శక్ష & . . * - &

காமஞ் சான்ற கடைக்கோட் காலை

ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”

எனவரும் தொல்காப்பியனார் வாய்மொழியால் இனிது புலனாதல் காணலாம். எல்லாவுயிர்க்கும் உயிர்க்குயிராய்ச் சிறந்து விளங்குதல் தனக்குவமையில்லாத இறைவனது இயல்பாதலின் உயிர்கட்குத் தோன்றாத்துணையாய் நின்று அருள்புரியும் கடவுளைச் சிறந்தது’ என்ற பெயரால் தொல்காப்பியனார் குறித்தார். தனக்குத் தோற்றக்கேடுக ளின்றி என்றும் உள்ளதாய்த் தன்பால் ஒன்றும் ஊடுருவ இயலாமையால் தூயதாய்த் தனக்கு எத்தகைய விகாரமும் இன்றி என்றும் ஒருபெற்றியதாய் உலகுயிர்கள் தோறும் செறிந்து நிற்றல் முழுமுதற் கடவுளின் இயல்பாதல் கருதி அதனைச் செம்பொருள்” என்ற சொல்லால் திருவள்ளுவர் குறிப்பிடுவர். ‘சிறந்தது எனத் தொல்காப்பியனார் குறித்ததனையே திருவள்ளுவரும் செம்பொருள் என்ற சொல்லாற் குறித்துள்ளார் என்பதற்கு,

“பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்

செம்பொருள் காணப தறிவு”

என்புழிச் சிறப்பென்னுஞ் செம்பொருள் என அடைபுணர்த் தோதியதே சான்றாகும். தொல்காப்பியனார் முதலிய முன்னைச் சான்றோர்களாற் சிறந்தது எனப் போற்றி யுரைக்கப்படும் முழுமுதற் பொருள் என்பார் சிறப்பென்னுஞ் செம்பொருள்” என்றார் வள்ளுவர். இல்லறவாழ்வில்

26. தொல்காப்பியம், பொருளதிகாரம், கற்பியல், 51. 27. திருக்குறள், 358.