பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வுச் சாலையில் நடந்து செல்கிறேன் வாகாய்க் காது கொடுப்பீரேல்,

ஆழும் காலடி கேட்பீர்; மற்றும்என் அருமைப் பாடலைக் கேட்பீரே.

சூழும் இன்பகல் போதில் ஒண்கதிர் சுடர்கொ ளுத்துவான் என்வழி

ஆழும் கங்குலில் மின்னும் வான்உரு

ஆயி ரம்பல ஆயிரம்.

ஆண்டு கள் பல மங்கல் வெள்ளியாய்

ஆக்கி நின்றன என்முடி, ஈண்டு வீசிய காற்றுஎன் இன்முகம்

இருள்.அ டைந்திடத் தீய்த்தது.

வீட்டின் வாயிலைத் தட்டி மக்களின்

வீடுகள் தோறும் செல்கிறேன், பாட்டி சைத்திடும் நெஞ்சைத் தட்டினேன்

பாய்ந்து உட்புறம் செல்லுவேன்.

இருண்ட நாள்களும் எண்ணி லாச்சுமை

ஏறும் நாள்களும் இங்குள:

கருமு கில்களும் ஞாயிற் றொளியினைக் கண்ம றைத்துஇருள் கொண்டிடும்.

கருநி ழல்களைத் துளைத்துச் சென்றிட மனமும் வீண்அவாக் கொண்டிடும்,

குருடாப் மாறிடும் விண்மீன் யாவுமே

அந்த நாளில்பின் மங்குமே.

எனினும் என்னுடை வாழ்க்கைப் பாதையில்

ஏகுவேன் தொடர்ந்தே ஏகுவேன்,

குணித்த சாலைகள் தாமும் சட்டென

முடிவை எய்திடும் அறிகுவேன்.

78