பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ற னக்கொரு வழியைக் காட்டிட

மக்கள் கண்களைப் பார்க்கிறேன்,

‘நன்று நண்பனே, செல், ந டுங்கிடேல்’ என்ற நாவுரை கேட்கிறேன்.

மாய்க்கும் கோடையின் நாளில், கொட்டிடும்

மாரிக் காலநல் மாலையில்,

வாய்த்த பேயிருள், கொண்டல் வன்குளிர் வான்.அ ரங்கினில் தோய்கையில்,

விண்மீன் தம்மையே நம்பிச் செல்கிறேன்

வெளிறி மங்கிடும் என்வழி,

கொண்டு காட்டுதல் கூர்மை கொண்டநல்

மக்க ளின்விழி கொண்டுதான்.

சீரார் மக்கள் இருக்கும் போதினில்

தவறு செய்திடல் இல்லையே,

தேர்ந்த வழியிலோ அன்றிப் பாட்டிலோ

சிறிதும் விலகலும் இல்லையே.

79