பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

ரிம்மா கஸாக்கவ உருசியக் கூட்டரசு

(19. 1932)

புயற்பாதை

பயணம் கடியது, பயணம் இனியது. பாதை முள்ளது, செங்குத் தானது. புயலில் சிதைபடு மரங்கள் சூழ்ந்திடும் பொடிபடு பாறைகள் இடறும் வழியது.

பரிசும் அங்கிலை, விருதுகள் பெறுகிலை, பரிவுறு புகழ்மொழி ஊக்கம் பெறுகிலை, விரும்பின் அவ்வழி ஏற்றுக் கொள்குவை: விலகலும் தொடர்தலும் உன்னைப் பொறுத்ததே.

தடைகள் பற்பல, குழிகளும் எண்ணில, தளரா உரமும் துணிவும் கொள்வையேல், அடையும் அவ்வழி உனக்கு மாத்துணை ஆகும்; வெற்றிக்கு அழைத்துனை ஏகுமே.

இரும ருங்கிலும் தூக்கு மேடையின் இருண்ட நீழலே தொடரும்; ஆயினும், உறுதி மிக்கநம் செங்கா வலர்படை இழப்பைத் தாங்கியே சென்ற திவ்வழி.

80