பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானரங்கில் வண்ணஒளி வகைவகையாய்க் கோலம் தானமைக்கும் தனிமாலை தனைக்காத லித்தாள்.

தன்நீல விழியொத்துத் ததும்பிநெகிழ்ந் தோடும் இன்கோல சுசோவியா ஆற்றைக்கா தலித்தாள்.

எழில்கொஞ்சும் இளவேனில் வனம்விரும்பி னாலும்

ஒழிவற்றுத் தன்குரலால் பாடுவதை வேட்பாள்.

கணக்கற்ற காதற்பா இசைக்கின்றாள், ஆனால் இணங்கத்தான் மறுக்கின்றாள் இதமில்லாப் பெண்ணாள்.

அவளுக்கே மூச்செறிந்தேன் இளைஞனாம்.அந் நாளில் அவளுக்கே அரற்றினேன்நான் அறிவில்லாப் போதில்.

அவளுக்கே அரற்றலொடு பெருமூச்சும் விட்டேன் அவளுக்கே இறப்பதற்கும் அன்றுதுணிந் திருந்தேன்.

படர்துயர மேலிட்டால் முதுகம்மி யன்பால் கடலணங்கு நம்பிக்கை பற்றிச்சில கேட்டேன்.

“யார்அறிவார் ஆங்கதனை, ஆனாலும் ஒன்று வாரியிலே பலவகையாம் மீன்வாழ்தல் உண்டு.

கடலணங்கு என்றிருந்து வெளிப்பட்டுஇசை பாடின் அடலணங்கு லையூபாஷா பாடுதல்போல் இருக்கும்.

என்றிசைத்தான். இன்னொளியின் வெண்மதியம்......பாடும் அல்லிசைப்புள்......... குன்றுகளின் மீதொளியின் சுடர்கள்.

பறந்தேகும் பறவை நிழல் விலகிவழிச் செல்லும் சிறந்தோங்கும் பாடல்ஒன்றோ ஆற்றருகில் கேட்கும்.

விண்மகளின் ஒருகன்னம் நாணத்தால் சிவக்கும் வெம்மையினால் மறுகன்னம் கன்றிப்போய்க் கிடக்கும்.

I 11