பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவிகள் அறுபட முகிலிடை வீறிடும்: கொடிய ஒலியிலும், குப்புறப் புழுதியில் மக்கள் விழுந்து பதுங்குகாட் சியிலும், கண்ணின் முன்னே நிகழும் சாவினைக் காண நேரிட்ட கடுங்காட் சியிலும் அந்த நினைவுகள் அமையுமேல் என்செய? ஐந்திலும், பத்தோடு ஐந்திலும் இருபத் தைந்திலும், அவர்களின் நினைவு போரில் தொடங்கும் இந்நாட்டில் இதுநிலை மறக்க முடியுமா? இதனை மனத்தால் கற்பனை செய்வோம்.

- - - - - w is a 4 x s a 4 s : * * * * * * * * - - - -

விண்உந்து பயணக் குறிப்பினைக் கொண்ட கையேடு அதனில் இல்லை.அப் போரே, ஆனால், அஃதோ அணிமையில் உள்ளது. பதினைந்து நிமியப் பறப்பினுக் குள்ளே வானூர்தி எந்திர வாய்அ டங்கினால் நாட்டின் எல்லைக் கோட்டுப் பகுதியில் பீரங்கிக் குண்டுகள் வீறிட்டு எரிமலை வாயாய் விரிவதைக் காணலாம். இப்பொழு தெல்லாம் வியப்புக் குரிய அனைத்துலக வான்வழி முளைத்துள் ளதுவே. இங்குயாம் பயணம் செல்கிறோம்; நொடிக்குளே அங்கே அவர்கள் படுகொலை புரிகிறார்! வியப்பினும் மேலாம் வியப்பு! போரினை ஏமாற்று வதுபோல் கல்கத்தா விலிருந்து விண்ணுந்துப் பறப்பில் பயணச் சீட்டுடன் முரணிய உடையும் கரடி முடியுடன் புதைகுழி தோண்டும் வெட்டியான் போல அமெரிக்க இளைஞர் வந்தனர் மூவர்;

8 ?