பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

விளாடிமிர் பீக்மென் எஸ்தோனியா

(sa. 1929)

இரண்டு சப்பான் பொம்மைகள்

இரண்டு பொம்மைகள்: சப்பான் நாட்டின் செர்ரி மரத்தில் செய்தவைஎன் அறையில் தொங்கு கின்றன; இரோசிமா விலிருந்து எனக்கவை வந்தன. சாம்பலின் மணம்அதில் சார்ந்துளது என்பர். கீழை நாட்டின் பொம்மையின் சாய்ந்த விழிகளில் எண்ணங்கள் புதையும்: கவிந்த தலைகள் மலர்உதிர் செர்ரி மரத்தின் நினைவை மறைக்கும்.

வாழ்வொரு சாம்பலாய் வீழ்ந்த காலையில் இரோசிமோ அழிந்த நாளில் செர்ரி மரமும் செத்து அழிந்தது.

எரிந்து ஒடிந்த அடிமரத் திருந்தே சப்பானியன் ஒருவன் சாய்துயர் விழிகொள் இரண்டு பொம்மைகள் இயற்றினான்: செர்ரி மரத்தில் செழித்துப் பூத்த எழில்மலர்க் கொடிகளால் அழகுறப் புனைந்தான்.

22