பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 செளந்தர கோகிலம் முத்துசாமி முன்னிலும் நூறு மடங்கு அதிகமாய்க் கலங்கி உருகி, 'என் தெய்வமே! தங்களுடைய சிலாக்கியமான குணமே தங்களுடைய தலையைக் காத்தது; தாங்கள் எனக்கு எள்ளளவும் கெடுதல் செய்யவில்லை. தங்களிடம் எனக்குக் கடுகளவும் பகைமையே கிடையாது; பணத்தாசைக்கு அடிமையாய், நான் இந்தக் காரியத்தைச் செய்யத் துணிந்தேன் ஆள் கொல்லியென்று பணத்திற்கு ஒரு பெயர் உண்டல்லவா. அது நிஜமாகிவிட்டது. நான் தங்களைக் கொல்ல இணங்கும்படிப் பணமே செய்தது; முடிவில் அது என்னையே கொன்று விட்டது” என்றான். திவான், 'நீ சொல்வதைப் பார்த்தால், வேறே யாரோ ஒருவர் உனக்குப் பணம் கொடுத்து, நீ எனக்குப் பாஷாணம் வைத்துக் கொல்லும்படித் துண்டியதாக அல்லவா அர்த்தம் ஆகிறது. அவர் இன்னார் என்பதையாவது தயவு செய்து வெளியிடு. அவரை நான் ஏதாவது கெடுதல் செய்திருந்தாலும், அதற்கு நான் ஏதாவது பரிகாரம் செய்கிறேன்' என்றார். முத்துசாமி, 'ஆண்டவனே! அதை மாத்திரம் கேட்க வேண்டாம். அதை நான் சொன்னாலும் தாங்கள் நம்ப மாட்டீர்கள்' என்றான். உடனே திவான், "அப்பா முத்துசாமி! நீ இவ்வளவுதூரம் உன் குற்றத்தை உணர்ந்து வருந்தி நல்ல மாதிரியாகப் பேசுகிறாயே! இந்தச் சமயத்தில் கூடவா நீ பொய் பேசுவாய். ஒருநாளும் பேசமாட்டாய். நீ சொல்லுகிறதை நான் உண்மை என்று நம்பத் தடையே இல்லை. நீ இப்போது இந்த ரகளிலியத்தைச் சொல்லாவிட்டால் அந்த மனிதர் இன்னா ரென்பது எனக்குத் தெரியப்போகிறதில்லை. அவருடைய பகைமையையும் குரோதத்தையும் நீக்க வகையில்லாமல் போய்விடும். உன் மூலமாய்ச் செய்த இந்தப் பிரயத்தனம் தவறிப் போனதைக் கண்டு, அந்த மனிதர் மறுபடி முயற்சிப்பார். அப்படி நான் இறந்து போவது உனக்குச் சம்மதமாயிருந்தால், நீ இந்த ரகளிலியத்தை வெளியிட வேண்டாம்” என்று கூறினார். உடனே முத்துசாமி, 'புண்ணியவானே! தாங்கள் சொல்வது நிஜமான சங்கதிதான். அந்த மனிதர் மறுபடியும் தங்களைக் கொல்ல எத்தனித்தாலும் எத்தனிக்கலாம். ஆகையால், நான்