பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 செளந்தர கோகிலம் வண்டியண்டை வந்து சேர்ந்து எஜமான் வாறந்தனியும் அப்பிடியே வண்டியிலெ குந்திக்கினு இருந்தேனுங்க. எஜமான் வந்தீங்க. அம்பிட்டுத்தான் சங்கதி’ என்றான். அதைக் கேட்ட கோகிலாம்பாள், 'ஒகோ! அப்படியா அதுவும் கடவுள் கிருபைதான்! நல்லது. அதிருக்கட்டும். முருகேசன் வலது பக்கமாய் வண்டியை ஒட்டிக்கொண்டு வந்ததாகப் போலீஸ் ஜெவான் மிரட்டி அவனை ஸ்டேஷனுக்கு அழைத்துக்கொண்டு போனானே. அங்கே அவனை அவர்கள் என்ன செய்வார்கள்?’ என்று மிகுந்த கவலையோடு வினவினாள். உடனே மினியன் அலட்சியமாகப் பேசத்தொடங்கி, 'அவுங்க என்ன பண்ணப் போறாங்க. வண்டி வலது பக்கமாக வந்துட்டா, அதுக்குள்ளற அந்த ஜெவானுக்குக் குடி முளுகிப் பூட்டுது போலிருக்குது. முருகேஸனை இட்டுக்கினு போயி அவன் தலையெச் சீவிப்புடப் போறதில்லை. ஏதாச்சும் ஒரு ரூவா அரை ரூவாக்காக அவராதம் போடப் போறாங்க. அதுக்கு மேலே ஒண்ணும் செய்யப் போறதில்லிங்க இல்லாமெப்போனா முருகேஸன் கெட்டிக்காரனாயிருந்தா, ஒரு ரெண்டெனாவை எடுத்து அந்தத் தானாக்காரன் சோப்பிலேயே சொருவிப்புட்டா ஒடனே ஒடியாந்துள்ளாம்” என்றான். அதைக் கேட்ட கோகிலாம்பாள் மிகுந்த இரக்கமும் கவலையும் காட்டி, "அடே மினியா அவனிடத்தில் சில்லரைக் காசு இருக்குமோ இருக்காதோ, அவன் அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் கஷ்டப்படுவான். நாம் அவனைக் கவனிக்காமல் அலட்சியமாய் இருப்பது சரியல்ல. சீக்கிரமாக வண்டியைப் பங்களாவுக்கு ஒட்டி என்னை அங்கே கொண்டு போய் விட்டு, நீ கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் அபராதம் செலுத்தி அவனை அழைத்துக் கொண்டு வந்து சேர்' என்றாள். அதைக் கேட்ட மினியன், 'அப்படியே ஆவட்டுங்க எசமான். இதோ வேகமா ஒட்டறேனுங்க. ஆனா, நாம் போற ரஸ்தாவெல்லாம் ரிப்பேரு பண்ணறாங்களாம். மூங்கலெக் கட்டிக் குறுக்கே மறைச்சிக்கிறாங்க. அதனாலே தான் அப்பாலே இப்பாலே இருக்கற ரஸ்தாவிலே போயி கத்திக்கினு வாறேன்.