பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 செளந்தர கோகிலம் தூண்டி எனக்கு விஷமிட ஏற்பாடு செய்தானோ, அவன் இந்தப் பாஷாணத்தை உண்டிருந்தால், அப்போது அது கொஞ்சமாவது நீதிக்கு ஒத்த காரியமாக இருக்கும். சே. அதுகூடக் கொடிதினும் கொடிய சம்பவம்! அவன் என்னைக் கொல்ல எண்ணிய பகைவனானாலும், அவன் இந்தப் பாஷாணத்தைத் தின்று இப்படித் துடிப்பதைக் கண்டு நான் சகிப்பேனா ஐயோ! கொடுமை கொடுமை! ஈசனே தயாபரனே! மனிதருடைய நீதி ஸ்தலத்தில்தான் கொலைக்குற்றம் செய்தவனுக்கு மரண தண்டனை விதிப்பதென்ற சட்டம் இருக்கிறது என்றால், சிறிதும் பகrபாதமும் தவறுமில்லாத உன்னுடைய நீதிஸ்தலத்தில் கூடவா பழிக்குப்பழி என்ற நியதி ஏற்பட்டிருக்கிறது? ஜெகதீசா, என்னப்பனே! ஐயோ! என் குடல் நடுங்குகிறதே! என் மனம் தவிக்கிறதே! என் அங்கங்கள் சோர்கின்றனவே! கடவுளே! மனிதருடைய நீதிஸ்தலத்தின் தீர்மானத்தைவிட உன்னுடைய தீர்மானம் அதிகக் கடுமையானதாக இருக்கிறதே! இந்த முத்து சாமி என்னைக் கொல்ல முயன்றானேயன்றி, என்னைக் கொன்றுவிடவில்லை. ஒருவனை மற்றவன் கொல்ல முயன்றால், அதற்கு மரணதண்டனை கொடுப்பதில்லையே! ஏதோ சில வருஷ காலத்திற்குக் கடுங்காவல் தண்டனைத்தானே கொடுக் கிறார்கள். அப்படி இருக்க, இந்த முத்துசாமி என்னைக் கொல்ல எத்தனித்த குற்றத்திற்கு இவனுக்கு இப்படிப்பட்ட மரண தண்டனையையும், பொறுக்க முடியாத கொடிய வேதனையை யும் விதிப்பது முறையாகுமா? ஈசுவரா கிருபாநிதே! இவனை இவ்வளவு தூரம் தண்டித்ததே போதுமானது. இவ்வளவோடு இவன் பிழைத்துப் போகும்படி அருள்புரிய வேண்டும் என்னப்பனே! நீதிக்கே உற்பத்தி ஸ்தானமாக அமைந்துள்ளவ னான உனக்குத் தெரியாத விஷயத்தை நான் எடுத்துச் சொல்லப் போகிறேனா!' என்று திவான் முதலியார் தமக்குள்ளாகவே கடவுளை நினைத்து உருக்கமாகத் தியானம் செய்வதும், வைத்தியரிடம் சென்று முத்துசாமி பிழைத்துக் கொள்வானா என்று அடிக்கடி கேட்பதும், தமது ஆசனத்தையடைந்து சோர்ந்து சிறிது மயங்கிக் கிடப்பதுமாக மாறி மாறிச் செய்துகொண்டே இருந்தார். அவ்வாறு அந்தப் பிற்பகல் வேளை கழிய, இரவு வந்து சூழ்ந்து கொண்டது. திவானாகிலும், வைத்தியராகிலும், மற்ற