பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 செளந்தர கோகிலம் யெளவனப்புருஷரைப் பூக்கடை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து இன்று காலையில் இங்கே கொண்டுவந்ததாகச் சொன்னார்கள். அது நிஜந்தானா?” என்றான். பாராக்காரன், "ஆம், நிஜந்தான். நீங்கள் யார்?' என்றான். வேலைக்காரன், 'பெட்டி வண்டியில் துபாஷ் ராஜரத்தின முதலியாருடைய சம்சாரத்தம்மாள் வந்திருக்கிறார்கள். அவர்களுடைய பெண்ணை இந்த முதலியாருக்குக் கட்டிக் கொடுக்க இருந்தார்கள். அந்தச் சமயத்தில் இவரைப் பிடித்துக் கொண்டுவந்து அடைத்திருக்கிறார்கள். அவரைப் பார்த்து, அவருக்கு வக்கீல் அமர்த்துவது முதலிய காரியங்களைச் செய்ய வேண்டும். அதற்காக எஜமானியம்மாள் வந்திருக்கிறார்கள். கொஞ்சநேரம் உள்ளே போய் அவருடன் பேச உத்தரவு கொடுக்கவேண்டும்” என்றான். பாராக்காரன், “உள்ளே போய்க் கைதிகளுடன் பேசுவதற்கு நாங்கள் உத்தரவு கொடுக்க எங்களுக்கு அதிகாரமேது? நீங்கள் யாராவது ஒரு வக்கீலை அமர்த்தி அவர் மூலமாய் மாஜிஸ்டிரேட்டுக்கு விண்ணப்பம் செய்து உத்தரவு வாங்கிக் கொண்டு வாருங்கள். உங்களை உள்ளே விடுகிறோம்" என்றான். அதைக் கேட்ட வேலைக்காரன் கலக்கமும் குழப்பமும் அடைந்து, நீங்களே உள்ளே விடமுடியாதா? மாஜிஸ்டிரேட்டின் உத்தரவு பெற்றுத்தான் ஆகவேண்டுமா?” என்றான். பாராக்காரன், “எங்களுக்கு அந்த அதிகாரம் இல்லை. அவரிடம்தான் போகவேண்டும்” என்றான். அதைக்கேட்டுக் கொண்ட வேலைக்காரன் அதற்குமேல் தான் என்ன சொல்வது என்பதை அறியாதவனாய்ச் சிறிது நேரம் தயங்கி நின்றபின் சரி, அப்படியானால் நீங்கள் சொன்னபடியே செய்கிறோம்" என்று கூறியபின் அவ்விடத்தைவிட்டுத் திரும்பி வண்டியைநோக்கி இரண்டோரடி நடந்தபின் எதையோ நினைத்துக் கொண்டு மறுபடி திரும்பிப் பாராக்காரனண்டை சென்று. guחנ! இன்னொரு சிறிய விஷயம். நான் மறுபடி தொந்தரவு கொடுப்ப தைப்பற்றிக் கோபித்துக்கொள்ளக் கூடாது. இன்று காலையில், அந்த ஐயாவைக் கொண்டுவந்து இங்கே அடைத்தார்களே,