பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழரை நாட்டான் தர்பார் - இறந்து பிழைத்தவர் 139

முகத்தைப் பார்க்கவும் என் மனம் எண்ணுமா?’ என்றார்.

அதைக்கேட்ட திவான் சாமியார், “வாஸ்தவம் உங்களு

டைய சொந்த ஊர் எது?” என்றார்.

கிழவர், “என் சொந்த ஊர் திருவடமருதூர்” என்றார்.

திவான் திடுக்கிட்டு, “ஹா திருவடமருதூரா? இதோ கும்பகோணத்துக்கு அடுத்தாற்போல இருக்கிறதே! அந்தத் திருவடமருதூரா?” என்றார். -

கிழவர், “ஆம், ஆம் அதே திருவடமருதூர்தான்’ என்றார். திவான் முதலியார், தங்களுடைய நாமதேயம் என்னவோ?” என்றார்.

கிழவர், “என்னைக் குஞ்சிபாத முதலியார் என்பார்கள்” என்றார்.

அந்தப் பெயரைக் கேட்ட திவான் மெய்மறந்து மின்சாரத் தால் தாக்கப்பட்டவர் போலத் துள்ளிக் குதித்து, “ஹா ஹா! ஹா! என்ன! தங்கள் பெயர் குஞ்சிபாத முதலியாரா? அவர்களுடைய குமாரர்சுட எங்கேயோ திவான் உத்தி யோகத்தில் இருந்ததாகச் சொன்னார்களே? அந்தக் குஞ்சிபாத முதலியாரா தாங்கள்?’ என்றார்.

கிழவர், ‘ஆம்! அதே பாவிதான் இந்த நடைப் பிணம். ஏன் நீங்கள் வியப்போடு கேட்பதைப் பார்த்தால் நீங்கள் திருவடமருதூருக்குப் போயிருப்பதாகவும், என்னைப் பற்றிக் கேள்வியுற்றதாகவும் தோன்றுகிறதே!” என்றார்.

அதைக்கேட்ட திவான் சாமியார் அதற்குமேல் பேச மாட்டாதவராய் அபாரமான துக்கத்தினாலும் மன எழுச்சி யினாலும் தாக்கப்பட்டு மூர்ச்சித்துப் பக்கத்திலிருந்த சுவரில் அப்படியே சாய்ந்துவிட்டார்.