பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 செளந்தர கோகிலம்

மானது. இந்தச் சந்தர்ப்பத்தில் கடவுள் தங்களையும், தங்கள் தங்கையையும் எங்களுக்குச் சிநேகம் செய்துவைத்தது, தங்கள் பிரியம் மாறாமல் இருக்கும்படி செய்தது எங்களுடைய பூர்வஜென்ம பூஜாபலனென்றே நினைக்கிறேன்’ என்று முற்றிலும் நைவாகவும் விநயமாகவும் கூறினாள்.

அதைக் கேட்ட சுந்தரமூர்த்தி முதலியார் சந்தோஷமாக நகைத்து இனிமையான குரலில், “இந்தச் சந்தர்ப்பத்தில் நமக்குள் பரிச்சயமும் சிநேகமும் ஏற்பட்டதை உங்களுடைய பூஜாபலன் என்று சொல்வதா, எங்களுடைய பூஜாபலன் என்று சொல்வதா என்ற சந்தேகம் முதலில் எனக்கு உண்டாகிறது. அதை நாம் இப்போது நிவர்த்தி செய்ய வகையில்லை; அதைப்பின்னால் பார்த்துக்கொள்ளலாம். இப்போது ஆகவேண்டிய அவசர காரியத்தை நாம் முதலில் கவனிக்கவேண்டும். இந்த வேலைக் காரி ஏன் இன்னமும் திரும்பிவரவில்லையென்பது தெரிய வில்லையே! மினியனுடைய குடிமயக்கத்தைப் பார்க்கும்போதே இவளும் ஒருவேளை மயங்கிக் கீழே விழுந்திருப்பாளோ என்னவோ தெரியவில்லையே! இருக்கட்டும். நானே போய் வண்டியைத் தயாரிக்கச் செய்துவிட்டு இதோ ஒரு நிமிஷத்தில் திரும்பி வருகிறேன்’ என்று நயமாகக் கூறியவண்ணம் அவ்விடத்தைவிட்டு வெளியில் சென்றுவிட்டார்.

சென்றவர் பத்து நிமிஷ நேரங்கழித்து வேலைக்காரிகளோடு திரும்பிவந்து முன்னிருந்த இடத்தை அடைந்தார். வேலைக் காரிகள் இருவரும் கோகிலாம்பாள் இருந்த இடத்திற்கு வந்தனர். உடனே சுந்தரமூர்த்தி முதலியார் முன்போல ஓங்கிய குரலில் சம்பாஷிக்கத் தொடங்கி, ‘கோகிலம்! நான் உன்னை அதிக நேரம் இங்கே தாமதப்படுத்தாமல் உடனே உன் ஜாகைக்கு அனுப்பிவிடவேண்டுமென்று எவ்வளவு முயற்சித்தாலும் எதிர்பாராத இடைஞ்சல் ஏதாவது வந்து குறிக்கிடுகிறது. எனக்கு நான்கு காசாரிகள் இருப்பதாக நான் சொன்னேனல்லவா. அவர்களுள் ஒருவனுடைய கைக்குழந்தை நோயாக இருந்தது; அது திடீரென்று இறந்துபோய்விட்டதாம். அதற்காக எல்லோரும் அந்தக் காசாரியின் வீட்டுக்கு ஒடி இருக்கிறார்கள்;