பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 செளந்தர கோகிலம்

பூஞ்சோலையம்மாளது சயன விடுதியில் படுத்திருந்தாள். அவள் நெடுநேரமாக அயர்ந்து துயின்று கொண்டிருந்தமையால், அப்போது அவளது தூக்கம் கலைந்து கொண்டிருந்த சமயமாதலால், வேலைக்காரியும் செளந்தரவல்லியம்மாளும், “புஷ்பாவதி” என்ற பெயரை இரண்டு மூன்று தரம் உச்சரித்தது அவளது உணர்வில்படவே, அவள் சரேலென்று விழித்துக் கொண்டெழுந்து உட்கார்ந்து தனது முகத்தை துடைத்துக் கொண்டவண்ணம் மகாலிலிருந்த வேலைக்காரியைப் பார்த்து, “என்ன ஜெயா? என்னையா கூப்பிடுகிறார்கள்? யார் கூப்பிடுகிறது?’ என்று வினவினாள். வேலைக்காரி, “ஆம், அம்மா! மயிலாப்பூரிலிருந்து உங்கள் தமயனார் உங்களைக் கூப்பிடுகிறார்கள்” என்றாள். உடனே புஷ்பாவதியம்மாள் சரேலென்று எழுந்து பாய்ந்துசென்று டெலிபோன் யந்திரத் தண்டை போய் அதை வாங்கி வைத்துக்கொண்டு பேசத் தொடங்கினாள். ஒரிடத்திலுள்ள ஒருவர் இன்னோரிடத்திலுள்ள வேறொருவருடன் டெலிபோன் யந்திரத்தின் மூலமாய்ப் பேசினால், பக்கத்திலுள்ள மனிதர்களுக்குச் சமீபத்திலுள்ளவர் பேசுவது கேட்குமன்றி தூரத்திலுள்ளவர்கள் பேசுவது கேட்காதென்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆகவே, புஷ்பாவதியம்மாள் பேசியது மாத்திரம் செளந்தரவல்லி பம்மாளுக்கும் வேலைக்காரிக்கும் தெரிந்ததேயன்றி, சுந்தர மூர்த்தி முதலியார் என்ன பேசினார் என்பது அவர்களுக்குத் தெரிய ஏதுவில்லை. அவர்களிருவரும் சம்பாவித்திருந்த காலத்தில் இடையில் புஷ் பாவதியம்மாள் தனக்குப் பக்கத்திலிருந்த வேலைக்காரியைப் பார்த்து, ‘அடி ஜெயா! பெரிய அம்மாள் இப்போது எங்கே இருக்கிறார்கள்?’ என்று கேட்க, வேலைக்காரி, ‘அவர்கள் ஏதோ அவசர காரியமாய் வண்டியில் எங்கேயோ போயிருக்கிறார்கள்?’ என்றாள். அதைக்கேட்ட புஷ்பாவதி பூஞ்சோலையம்மாள் அநேகமாய்க் கோகிலாம்பாளைத் தேடிக்கொண்டே போயிருக்கவேண்டும் என்று நிச்சயித்துக்கொண்டதன்றி வேலைக்காரியையும் அவ்விடத்தைவிட்டுப்போகும்படி அனுப்பிவிட்டு, சுந்தரமூர்த்தி முதலியாருடன் அரைநாழிகை நேரம் வரையில் சம்பாஷித்துக்