பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 111

போகிறேன், அதைச் சொன்னால் தங்கள் மனம் இப்போதிருப் பதைவிட இன்னம் கேவலமான நிலைமையை அடைந்து புண்பட்டுவிடும். ஆயினும், தங்களுக்கு அது அவசியம் தெரிய வேண்டிய விஷயம். ஆகையால், நான் அதைச் சொல்லுகிறேன். தாங்கள் அம்மாளையும் குழந்தையையும் இராமலிங்கம் என்ற தவசிப்பிள்ளையுடன் திருவடமருதூருக்கு அனுப்பினர்கள் அல்லவா? மூன்றாம் நாள் காலையில் அவர்கள் அந்த ஊரை யடைந்து வீட்டுக்குப்போய்ச் சேர்ந்தார்களாம். தங்கள் தகப்பனார் நிரம்பவும் அபாரமான பிரியத்தோடு அவர்களை வரவேற்றார் களாம்; குழந்தையைத் தூக்கி எடுத்துப் பன்முறை ஆசையோடு கட்டித்தழுவி முத்தமிட்டாராம்; அம்மாளிடம் மிகுந்த வாஞ்சையாகவும் உருக்கமாகவும் பேசிப் பேசி ஊர் விசேஷங் களையெல்லாம் விசாரித்தார்களாம். அவர்கள் இவர்களிடம் காட்டிய ஆசைக்கு அளவே சொல்ல முடியாதாம்; அன்றைய தினம் இவர்களுக்குப் பெருத்த விருந்து நடந்ததாம். பெரியவர் இவர்களுக்கு ராஜோபசாரமே செய்தாராம். அன்றைய பகல் கழிந்ததாம். சாயுங்காலம் பெரியவர் வெளியில் போய்விட்டார் களாம். அப்போது, இராமலிங்கம் என்பவரின் சம்சாரம் அம்மாளிடம் வந்து நிரம்பவும் பணிவாகவும் விசுவாசமாகவும் பேசி அடிக்கடி அம்மாளுடைய முகத்தை நிரம்பவும் பரிதாபகரமாகவும் கபடமாகவும் பார்த்துப் பார்த்துப் பெரு மூச்சு விட்டாளாம். அதைக் கண்ட நம்முடைய அம்மாள், “ஏனம்மா ஒரு மாதிரியாகப் பேசுகிறீர்கள்? ஏதாவது விசேஷம் உண்டா? என்று கேட்டார்களாம். உடனே தவசிப் பிள்ளையின் சம்சாரம், “அம்மா! உங்களைப் பார்த்தால் வைகுண்டத்திலிருந்து மகா லக்ஷ்மியே நேரில் வந்தது போலிருக்கிறது. உங்கள் முகத்தைப் பார்க்கப் பார்க்க என்னையறியாமல் விசனம் பொங்குகிறது” என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் பேசவில்லையாம் நம்முடைய அம்மாள், ‘என் முகம் மகா லசுஷ்மியின் முகம்போல இருந்தால், உங்களுக்கு சந்தோஷம் அல்லவா உண்டாக வேண்டும். நீங்கள் விசனப்படுகிறீர்களே! ஆகையால் என் முகம் மகாலசஷ்மியின் முகம் போல இல்லையென்பது நிச்சயம்’ என்றார்களாம். அதைக்கேட்ட அந்த அம்மாள், ‘நான் உண்மையாகப் பேசுகிறேன். நீங்கள் தமாஷாகப் பேசுகிறீர்கள். என் மனசில்