பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 செளந்தர கோகிலம்

யென்றே ஏற்றுக் கொள்வார்கள். அந்தக் கபடிகளும் அதற்குமுன் நிச்சயமாக எண்ணியிருந்த விஷயம் சந்தேகத்துக்கு மாறிவிடு மல்லவா. ஆகையால், அதுவும் ஒரு விதத்தில் அநுகூலந்தானே’ என்றாள்.

அதைக்கேட்ட கோகிலாம்பாள் மறுமொழி கூறாமல் மெளனத்தில் ஆழ்ந்துவிட்டாள். பூஞ்சோலையம்மாள் உடனே பேசத் தொடங்கி “சரி, இன்னம் இரவு முழுதும் எல்லோரும் யோசனை செய்வோம். காலையில் ஏதாவது தக்க பரிகாரம் தேடுவோம்” என்று கூறினாள்.

அதைக்கேட்ட புஷ்பாவதி, “சரி, அப்படியே ஆகட்டும். இப்போது மணி ஒன்பதுக்கு மேலிருக்கலாம் போலிருக்கிறது. வாருங்கள் போகலாம். நீங்கள் இருவரும் இன்று முழுதும் எங்கெங்கோ போய் அவஸ்தைப் பட்டுவிட்டு வந்திருக்கிறீர்கள். உள்ளே போய் இராத்திரி போஜனத்தை முடித்துக்கொண்டு படுத்துக் கொள்ளுங்கள். பொழுது விடியட்டும். அதன்பிறகு யோசனை செய்யலாம்” என்றாள்.

உடனே பூஞ்சோலையம்மாள், ‘ஆம். வாருங்கள் டோவோம். எனக்கு இந்த மனவேதனையில் பசியே உண்டாகவில்லை. விருந்தாளியாக வந்திருக்கும் உங்களைக்கூட நான் இதுவரையில் விசாரிக்க முடியாமல் போய்விட்டது. வேலைக்காரிகள் உங்களுக்குத் தாகத்திற்குக்கூடக் கொடுத்திருக்க மாட்டார்கள் போலிருக்கிறது. சரி வாருங்கள் சமையலறைக்குப் போவோம்’ எனறாள.

உடனே கோகிலாம்பாள், தனது தாயை நோக்கி, ‘அம்மா! நான் இராத்திரி சாப்பாட்டை இவர்களுடைய பங்களாவிலேயே முடித்துக் கொண்டு வந்துவிட்டேன். எனக்கு இப்போது உடம்பு நிரம்பவும் அவஸ்தையாக இருக்கிறது. நான் போய்ப் படுத்துக் கொள்ளுகிறேன். நீங்கள் இவர்களை அழைத்துக் கொண்டு போய் சாப்பாடு செய்து வையுங்கள் என்று கூறி அனுமதி பெற்றுக் கொண்டு தனது சயன அறைக்குப் போய்விட்டாள்.

புஷ்பாவதியும் பூஞ்சோலையம்மாளும் சமையலறையை நோக்கிச் சென்றனர். அவர்கள் இருவரையும் விடுத்து, நாம் கோகிலாம்பாளைத் தொடர்ந்து செல்வோம். அந்த நற்குணவதி