பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 செளந்தர கோகிலம்

வந்தாலும் வந்துவிடுமென்று நினைக்கிறேன். ஆகையால், புஷ்பாவதியம்மாளுடைய கலியாணத்தோடு சேர்த்து இந்தக் கலியாணத்தையும் நடத்திவிடுவோம்.

சுந்தரமூர்த்தி முதலியார் : உன் அக்காளும்கூட இருப்பா ளல்லவா?

செளந்தரவல்லி : நாளைய தினம் காலையில் அவளை நான் இந்தப் பங்களாவை விட்டுத் துரத்திவிட்டு மறுவேலை பார்க்கிறேன். எங்களுக்கு வண்ணாரப்பேட்டையில் இன்னொரு பங்களா இருக்கிறது. அதில் குடித்தனம் இருந்தவர்கள் போன மாசத்தில்தான் காலிசெய்துவிட்டு எங்கேயோ போனார்கள். வேறே யாரும் வரவில்லை. அக்காள் அங்கே போகட்டும்; அம்மாள் இங்கும் அங்குமாக இருக்கட்டும்.

சுந்தரமூர்த்தி முதலியார் : உங்களுடைய சொத்துக் களெல்லாம், அவர்களிடம் தானே இருக்கின்றன. அவர்கள் கண்ணபிரான் முதலியாருக்கும் வக்கீலுக்கும் கொடுத்து வீண் விரயம் செய்து கொண்டு போனால், அது உனக்கும் நஷ்டந்தானே!

செளந்தரவல்லி : எங்களுடைய சொத்துகள் பெரும் பாகமும் நகைகளாகவும், புரோநோட்டு லேவா தேவிகளாகவும், பங்களாக்களாகவும் இருக்கின்றன. நகைகளும், தஸ்தாவேஜிகளும் அம்மாளுடைய இரும்புப் பெட்டியில் இருக்கின்றன. இப்போதே போய் கொத்துச் சாவியை எடுத்து நான் பத்திரப்படுத்தி விடுகிறேன். அவர்கள் கேட்டால், கொடுக்க முடியாதென்று சொல்லி விடுகிறேன்.

சுந்தரமூர்த்தி முதலியார் : கோகிலாம்பாள் தன்னுடைய பாதி பாகத்தைக் கொடுக்கும்படி கேட்டால், என்ன செய்வாய்?

செளந்தரவல்லி : அதெல்லாம் இப்போது முடியாதென்று சொல்லி விடுகிறேன். அவளுடைய சாப்பாட்டுச் செலவுக்கு மாசம் ஏதாவது ஐம்பது நூறு கொடுப்பதாகச் சொல்லி விடுகிறேன். .

கந்தரமூர்த்தி முதலியார் : ஆம்; அதுதான் சரியான காரியம்! அவர்கள் வேண்டுமானால் பாக வியாஜ்ஜியம் தொடரட்டும்.