பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணப் பைத்தியம் 143

பிறகு பார்த்துக் கொள்ளலாம். நாளைய தினம் காலையில் நீ இந்தக் காரியங்களையெல்லாம் இப்போது சொன்னதுபோல முடித்துவிடு. நான் என் தங்கையை அழைத்துப் போவதற்காகக் காலையில் வருவேன். அதற்குமுன் எல்லா வற்றையும் நீ முடித்து விட்டாயென்று என் தங்கை சொல்லும் பட்சத்தில், உன் தாயாருடன் பேசி, உன் கலியாணத்தையும், புஷ்பாவதியின் கலியாணத்தோடு சேர்த்து முடித்துவிட நான் பிரயத்தனம் செய்கிறேன். இதுதான் முடிவான தீர்மானம். -

செளந்தரவல்லி : (மிகுந்த மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைந்து) சரி. அப்படியே செய்து முடிக்கிறேன். காலையில் தாங்கள் அவசியம் வந்து நம்முடைய கலியாண விஷயத்தை முடிவு கட்டியே தீரவேண்டும்.

கந்தரமூர்த்தி முதலியார் : சரி, அப்படியே ஆகட்டும். நீ மாத்திரம் சொத்துகளை அவர்களிடம் கொடுத்துவிட்டு ஏமாறிப் போய்விடாதே. அவர்களுடைய குடுமி உன் கையில் இருக்கும் படியாக நடந்து கொள்.

அதைக்கேட்ட செளந்தரவல்லி, “இதோ நான் போய் அம்மாளுடைய கொத்துச் சாவியை எடுத்து பத்திரப்படுத்தி விட்டுப் பிறகு படுத்துக் கொள்ளுகிறேன்’ என்றாள்.

கந்தரமூர்த்தி முதலியார் : இப்போது நீ இங்கே வந்தது புஷ்பாவதிக்குத் தெரியுமா? தெரியாதா? -

செளந்தரவல்லி : நான் இங்கே வருவதற்குமுன் அவர் களுடைய படுக்கைக்குப் போய்ப் பார்த்தேன். அவர்கள் இல்லை. தங்களுடைய கடிதத்தைப் படுக்கையின் நடுவில் வைத்துத் தலையணையை மேலே வைத்துவிட்டு வந்திருக்கிறேன் - என்றாள்.

உடனே சுந்தரமூர்த்தி முதலியார், “சரி, நேரமாகிறது. யாராவது விழித்துக்கொண்டு பார்க்கப் போகிறார்கள். நான் மதிலைத் தாண்டி இப்படியே போய்விடுகிறேன். நீயும் மறைவாக உன் விடுதிக்குப் போ’ என்று கூற, இருவரும் ஒருவரையொருவர் பிரேமையோடு பார்த்துவிட்டு விடை பெற்றுக் கொண்டு பிரிந்து அவ்விடத்தைவிட்டு இரண்டு திக்குகளில் விரைவாக நடந்து சென்றனர்.