பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியானப் பைத்தியம் 16.1

வரமாட்டார்கள். ஆகையால் இரண்டு கலியாணங்களையும் ஒரே முகூர்த்தத்தில் மைலாப்பூரிலேயே நடத்திவிடத் தீர்மானித் திருக்கிறேன். இவர்களோ இரண்டு பேர்தான் இருக்கிறார்கள். இவர்களுடைய ஜனங்களிடமும் நானே போய் கோகிலாம்பாள் இன்ஸ்பெக்டருடைய வீட்டுக்குப் போனதின் உண்மையான காரணத்தை வெளியிட்டு அவர்களைத் திருப்திசெய்து, வரக் கூடியவர்களை அழைத்துக் கொண்டு வருகிறேன். நாம், நம்முடைய ஆள்கள், இவர்கள், இவர்களுடைய வேலைக் காரர்கள், சொந்த ஜனங்கள் ஆகிய எல்லோரும் மைலாப்பூரார் பங்களாவுக்கே போய் விடுவோம். இவர்கள் நம் இழுப்புக் கெல்லாம் இணங்கி வருவார்கள். இங்கே கலியாணம் நடந்தால் ஜனங்கள் வரமாட்டார்கள். அங்கே நடந்தால் வருவார்கள் என்று சொல்லி செளந்தரவல்லியைத் துாண்டிவிட்டால், அது சுலபத்தில் பலித்துவிடும். ஏனென்றால், அதிக காலம் வளர்த்தாமல் இரண்டையும் ஒன்றாகவே சீக்கிரத்தில் நாம் முடித்துவிட வேண்டும்.

புஷ் பாவதி : ஆம். அது நல்ல யோசனைதான். அதிருக்கட்டும். நேற்றிரவு நீங்கள் செளந்தரவல்லியோடு பேசிக் கொண்டிருந்தபோது என்னுடைய புகைப்படத்தை அந்த மாப்பிள்ளைக்குக் காட்டியதாகச் சொன்னீர்களாமே! அதை நீங்கள் இதுவரையில் என்னிடம் சொல்லவே இல்லையே! அவர்கள் அரை மனசோடு இருந்ததாக நீங்கள் கடைசியாக என்னிடம் தெரிவித்தீர்கள். இப்போது காரியம் முடிந்து போயிருக்கிறதே. அது இவ்வளவு சுலபத்தில் எப்படி முடிந்தது?

சுந்தரமூர்த்தி முதலியார் : என்ன புஷ்பாவதி என்னால் எதுதான் முடியாதென்று நீ நினைத்துக் கொண்டாய்! அதற்குத் தகுந்தபடி யுக்தியாக நடந்துகொண்டால், சாதிக்க அசாத்திய மானதையெல்லாம நாம் சாதித்துவிடலாம். நாம் மனசு வைத்தால் மகாராஜாவின் வீட்டுப் பிள்ளைக்குக்கூட உன்னைக் கட்டி வைத்துவிடுவேன். இப்போது உனக்குப் பார்த்திருக்கும் இடம் எப்பேர்ப்பட்ட தெரியுமா! அதை ஒரு மகாராஜனுடைய சமஸ்தானம் என்றுதான் சொல்ல வேண்டும். பிள்ளை மகா புத்திசாலி, பார்ப்பதற்கு மன்மதனைப் போலவே இருக்கிறான். செ.கோ.:W-1 -