பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 செளந்தர கோகிலம்

அடிக்கிறார். இவரிடமிருந்த பணமெல்லாம் செலவாகிவிட்டது. இவர் கோவிந்தபுரம் ஜெமீந்தாருடைய பிள்ளையென்று பொய்யாகிலும் சொல்லிக் கொண்டு பங்களா மோட்டார் வண்டிகள், ஸோபா நாற்காலிகள், கட்டில் மெத்தைகள் முதலியவைகளை மாத வாடகைக்கு வாங்கி வைத்து, பல துஷ்டர்களை வேலைக்காரர்களாய் அமர்த்திக் கொண்டு வெளி வேஷம் போட்டுப் படாடோபமாய் இருந்து வருகிறார். இவருக்கு மாதம் மாதம் செலவுக்குச் சுமார் இரண்டாயிரம் ரூபாய் வரையில் வேண்டியிருப்பதால், இவர் புதிது புதிதான தந்திரம் செய்து, பல இடங்களில் போய்ப் பணம் பறித்து எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டு வருகிறார். அப்படிப்பட்ட துஷ்ட மனிதரோடு இருக்க எனக்குப் பயமாக இருக்கிறது. இவருடைய தங்கை இதற்குமுன் யாரையோ கலியாணம் செய்து கொண்டிருந்தாளாம். புருஷர் இறந்துபோய் விட்டாராம். அவருடைய சொத்துக்களையெல்லாம் எடுத்து வந்து தகப்பனும், பிள்ளையும் எல்லாவற்றையும் வீணாக்கி விட்டார்களாம். அந்தப் பெண் கூடியவரையில் நல்ல குணமுடையவள். அவள் வேறு புருஷனைக் கண்னெடுத்தும் பார்ப்பதில்லை. அவளைத் தக்க பெரிய மனிதருடைய பிள்ளை எவருக்காவது கலியாணம் செய்து கொடுத்து விடுவதாக இவர் அடிக்கடி சொல்லுகிறார். அவள் இணங்கமாட்டேன் என்கிறாள். ஆனாலும், அவளுடைய பணமெல்லாம் போய்விட்டது ஆகையால், அவள் இவரையே அண்டிப் பிழைக்க வேண்டியிருப்பது பற்றி, வெளிக்கு மாத்திரம் இவருடைய மனப்போக்கின்படி நடப்பவள் போலக் காட்டி வருகிறாள். கெட்ட வழியில் போக வேண்டாமென்று நான் புத்தி சொன்னால், எனக்கு அடியும் உதையும் வசவுகளும் கிடைக்கின்றன. எனக்கு அடங்கி நடக்க இஷ்ட மில்லாவிட்டால், ஒடிப்போ என்று இவர் அடிக்கடி சொல்லி அதட்டுகிறார். நான் உங்களிடம் வருவதற்குப் பயமாக இருக்கிறது. வேறே இன்னோர் இடத்திற்குப் போனால், இதை விட அதிக கேவலமாக நான் நடத்தப்படுவேனோ என்னவோ என்ற சந்தேகம் உண்டாகிறது. ஆகையால், நான் எந்த வழியிலும் போக மாட்டாமல் அகப் பட்டுக்கொண்டு முழிக்கிறேன். நானும் வெளிப் பார்வைக்கு இவருடைய இஷ்டப்படி நடப்பவள் போலவும், இவரிடம்