பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணக் கோலம் - கிரகப்பிரவேசம் 223

புவிகள் யோக்கியமான மனிதர் பேரிலெல்லாம் சந்தேகம் கொண்டு வீண்பாடு படுகிறார்கள். இதோ, புரசைப்பாக்கத்தில் துபாஷ் ராஜரத்ன முதலியார் பங்களாவுக்குப் பக்கத்திலுள்ள ஒட்டு வீட்டில் இருக்கும் கண்ணபிரான் என்பவனே திருடன். அவன் ரெவினியு போர்டாபிசில் குமாஸ்தா வேலை பார்க்கிறான். திருடிய சொத்துக்கள் அவனுடைய வீட்டில் வைத்துப் புதைக்கப் பட்டிருக்கின்றன. நீங்கள் உடனே போய்ப் பார்த்தால், சொத்துக் கள் அகப்படும். தாமதம் செய்தால், சொத்துகள் பராதீனமாய் விடும். இதை வேறு யாரிடமும் அனுப்பாம்ல் உடனே நீங்களே போய்ப் பார்த்தால், திருட்டை ஒரு நிமிஷத்தில் கண்டுபிடித்து விடலாம். ஜரூர், ஜரூர், ஜரூர்.

இப்படிக்கு பொய்யா மொழியேன் - என்று அழகிய மணவாளர் படித்து முடித்தார். முடிக்கவே, அங்கிருந்தோரது கோபமும் ஆவேசமும் உச்ச நிலைமையை அடைந்துவிட்டன.

அதை உணர்ந்த போலீஸ் கமிஷனர் உடனே எல்லோரையும் அமர்த்தி, “கொஞ்சம் பொறுங்கள், பதற வேண்டாம். இன்னம் சில முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன” என்று கூறியபின், இராஜாம்பாளை நோக்கி, ‘இந்தக் கடிதங்களையெல்லாம் யாரம்மா எழுதியது?’ என்றார். அவள், “நான்தான் எழுதினேன்” என்றாள்.

போலீஸ் கமிஷனர், “உன் தகப்பனாருக்கு எழுதியிருக்கும் இரண்டு கடிதங்களிலும், நீ இவரைப் பற்றிச் சொல்லியிருக்கிற சங்கதிகளெல்லாம் நிஜமானவைகள் தானா அல்லது உன் தகப்பனார் உன்னை அழைத்துக் கொள்ள வேண்டுமென்று சும்மா வாகிலும் கற்பனையாக எழுதியிருக்கிறாயா?” என்றார்.

இராஜாம்பாள், “எல்லாம் நிஜமான சங்கதி; இதெல்லாம் பொய்யாயிருந்தால், நான் இவரைவிட்டுப் போகவே எண்ண மாட்டேனே’ என்றாள்.

அந்தச் சமயத்தில் ஜனக்கும்பலை விலக்கிக் கொண்டு, போலீஸ் உதவிக் கமிஷனர் வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்த பெரிய கமிஷனர், “என்ன சமாசாரம்?” என்றார்.