பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 செளந்தர கோகிலம்

உதவிக் கமிஷனர், “நான் பிரசிடென்சி மாஜிஸ்டிரேட்டின் வீட்டுக்குப் போனேன். அவர் இந்தக் கலியாணத்துக்கு வர வேண்டுமென்று புறப்பட்டுக் கொண்டிருந்தார். நான் எல்லாத் தகவலையும் அவரிடம் சொல்லி, அவரையும் கூட அழைத்துக் கொண்டு இன்னம் பல பெரிய மனிதரையும் கூட்டிக்கொண்டு சுந்தரமூர்த்தி முதலியாருடைய பங்களாவில் நுழைந்து, அங்கிருந்த வேலைக்காரர்கள் எல்லோரையும் கைதிசெய்து, ஸ்டேஷனுக்கு அனுப்பிவிட்டு, கதவுகளைத் திறந்து சோதனை போட்டத்தில், இன்ஷியூர்டு ரிஜிஸ்டர்டு கடிதங்களில் இருந்த நூறு ரூபாய் நோட்டுகள், நகைகள், பத்து ரூபாய் மணியார்டர் செய்த ரசீது, இன்னும் பல முக்கியமான கடிதங்கள் முதலியவைகளை ஜப்தி செய்து எடுத்துக்கொண்டு வந்திருக் கிறேன். துளளியம்மாளுடைய கடிதத்தில் சொல்லப்பட்டபடி எல்லாப் பொருள்களும் அகப்பட்டுவிட்டன. அவைகளைக் கொண்டு போய்க் கச்சேரியில் வைத்து சீல் செய்தோம். கண்ண பிரான் முதலியார் வீட்டிலிருந்து எடுத்த பெட்டியை உடனே நீதிபதி பலருக்கு முன்னால் எடுத்துத் திறந்து எல்லாவற்றையும் பிரித்துப் பார்த்தார். எல்லாம் காலியாயிருந்தன. அவை அவ்வாறு காலியாயிருந்ததாக சாட்சிகளிடம் கையொப்பம் வாங்கிக் கொண்டு வந்தோம் என்றார்.

போலீஸ் கமிஷனர், ‘நீதிபதி இப்போது எங்கே இருக்கிறார்கள்?’ என்றார்.

உதவிக் கமிஷனர், “இங்கே கலியாணத்துக்காக வந்து, ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்!” என்றார்.

பெரிய கமிஷனர், ‘இந்தக் கலியாணங்கூட இனி நடக்கப்போகிறதா? அவர்கள் வீண் பிரயாசைப்பட்டு இவ்வளவு தூரம் ஏன் வரவேண்டும்” என்றார்.

உதவிக் கமிஷனர், “என்னவோ, ஒருவேளை மாப்பிள்ளை இந்தப் பெண்ணையே கட்டிக்கொள்ள ஆசைப்படலாம். நாம் போக வேண்டிய மரியாதைப்படி போய்விட்டு வருவோமென்று அவர்கள் சொல்லிக் கொண்டே வந்தார்கள்’ என்றார்.

போலீஸ் கமிஷனர், ‘யாருடைய சம்சாரத்தை யார் கட்டுகிறது! இந்தப் புஷ்பாவதியம்மாளுடைய புருஷர் மலை