பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்த கலசம் 269

வேலைகளைச் செய்துவிட்டுப் போவாள். அப்பொழுது புஷ்பாவதியும், சுந்தரமூர்த்தியும் குஞ்சிதடாத முதலியாரது மாளிகைக்கு வந்ததில்லை. ஆதலால், அவர்கள் இருவரும் காந்திமதியம்மாளைப் பார்த்ததில்லை. ஆகவே, அவர்கள் கற்பகவல்லி கண்ணபிரான் ஆகிய இருவரது அடையாளத்தையும் கண்டுகொள்ள இயலவில்லை. புஷ்பாவதி கமலவல்லியாக மாறிக் குஞ்சிதயாத முதலியாரிடம் வந்தபின், கற்பகவல்லி யம்மாள் கண்ணபிரான் என்பவர் இன்னின்னார் என்பதை உணரவே, அவள் அடைந்த கிலேசமும் மனவேதனையும் கழிவிரக்கமும் இவ்வளவென்று கூற இயலாது. ஆயினும், கமலவல்லியும் காந்திமதியம்மாளும் அந்தக் கலியாணத்திலேயே ஒருவருக்கொருவர் அன்னியோன்னியத் தன்மை அடைந்து விட்டனர்.

கலியான தினத்திற்கு மறுநாள் ஜனங்கள் வதுTவரர்களுக்கு நிரம்பவும் குதூகலமாய் நலங்கு, ஊஞ்சல் முதலியவற்றை நடத்தி ஆநந்தமாக விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில், பங்களா வின் வாசலில் பாண்டு வாத்திய முழக்கம் உண்டாயிற்று. அது என்னவாக இருக்கலாமென்று நினைத்து எல்லோரும் திடுக்கிட்டு அதை உற்றுக் கவனித்தனர். இரண்டொரு நிமிஷத்தில் வெள்ளிக் கட்டியம் தாங்கிய ஒரு சேவகன் உள்ளே ஓடிவந்து, ‘திவான் முதலியாரைப் பார்ப்பதற்காக திருவனந்தபுரம் மகாராஜாவும் சென்னை கவர்னரும் வந்திருக்கிறார்கள்’ என்றான். அதைக்கேட்ட திவான் முதலியார் திடுக்கிட்டு, ‘திருவனந்தபுரத்து மகாராஜா இந்த ஊருக்கு எப்போது வந்தார் கள்? அவர்களுக்கு இந்தச் சங்கதி எப்படி எட்டியது?’ என்றார்.

உடனே சேவகன், ‘திருவனந்தபுரம் மகாராஜா தமது சமஸ்தான ஆளுகை விஷயமாக சென்னை கவர்னரிடம் நேரில் ஆலோசனை செய்வதற்காக இந்த ஊருக்கு வந்து ஐந்தாறு தினங்களாகின்றன; இன்று புறப்பட்டுப் போகப் போகிறார். கொஞ்ச நேரத்திற்குமுன், யாரோ டெலிபோன் மூலமாய் இங்கே இருந்து, அவருடன் பேசினார்கள். நீங்கள் உயிரோடு இருப்பதாகவும் உங்கள் குமாரருக்குக் கலியாணமென்றும் சொன்னார்கள். அதைக் கேட்டவுடன் அவருக்கு உண்டான சந்தோஷம் இவ்வளவு அவ்வளவென்று சொல்ல முடியாது.