பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 45

வெகுதூரம் வரையில் ஜனங்கள் கிளறிப் பார்த்தனர். அவை காணப்படவில்லை. இவரும் இன்னம் ஒருவரோ பலரோ சேர்ந்தும் இந்தத் திருட்டை நடத்தி இருக்க வேண்டுமென்பது பரிஷ்காரமாகத் தெரிகிறது. இவர்கள் அயுதத்தைக் கொண்டு தங்கச் சங்கிலியை வெட்டி எடுத்திருக்கிறார்கள். எடுத்தவுடன் அதன் கொக்கி சுழன்று கொண்டதோ அல்லது இவர்களே அதைக் கழற்றி, தலைக்கு ஒரு பாகமாய் எடுத்துக் கொண்டார்களோ தெரியவில்லை. சங்கிலியின் இன்னொரு பாகம், வைர மோதிரம், நகையை வெட்டிய ஆயுதம் முதலியவைகளை எடுத்துக்கொண்டு மற்றவர் rணநேரத்தில் தப்பித்துக்கொண்டு அப்பால் போயிருக்க வேண்டுமென்றே நாம் யூகிக்கவேண்டியிருக்கிறது. இவர் குழந்தையின்மேலிருந்து நகையைக் கழற்றியதை யாரும் நேரில் பார்க்கவில்லை. திருடப்பட்ட சொத்தின் ஒரு பாகம் இவரிட மிருந்தது நிச்சயமாதலால், இவர் நகையைத் திருடிய குற்றத்தை யாவது, திருடுவதற்கு உடந்தையாயிருந்து திருட்டுச் சொத்தை வாங்கிய குற்றத்தையாவது செய்திருக்க வேண்டும். அதுவுமன்றி, இவர் உலகைத் துறந்து காஷாயந் தரித்துக் கொண்டிருக்கும் பரதேசி. இவர் உண்மையான துறவியாயிருந்தால், இவர் தம்மிடம் பணத்தையே வைத்துக் கொண்டிருக்க மாட்டார்.

இவருடைய உடம்பைப் போலீசார் சோதனை செய்து பார்த்ததில், இவருடைய இடுப்பில் கட்டப்பட்டிருந்த துணிப் பைக்குள் 167 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்து அகப்பட்டி ருக்கின்றன. இவர் உண்மையான சாமியார் அல்லவென்டதும், வேஷக்காரச் சாமியார் என்பதும் நிச்சயமாகின்றன. அவ்வளவு பெரிய பணத்தொகை இவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்பதைப் பற்றியும் இவர் திருப்திகரமான சமாதானம் சொல்ல மறுக்கிறார். இவருடைய ஊர் பெயர் முதலியது எதைக் கேட்டாலும் இவர் வெளியிடாமல் குதர்க்கமாக மறுமொழி கூறுகிறார். அநேகமாய் அந்தப் பெருத்த தொகையும் எவ்விடத்திலிருந்தாவது களவாடப்பட்டதாகவே இருக்க வேண்டும். அந்தப் பணமும், களவாடப்பட்ட சங்கிலித் துண்டும் கோர்ட்டாரிடம் ஒப்புவிக்கப்பட்டிருக்கின்றன. கோர்ட்டா ரவர்கள் சாட்சிகளை விசாரித்து, கைதி என்ன குற்றம் செய்திருக்