பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 செளந்தர கோகிலம்

பிரசாதங்கள் பெற்றுக்கொண்டு, செந்திலாண்டவனை இன்ன மொரு முறை நமஸ்கரித்துவிட்டு உதவிச் சாமியாருடன் வெளியில் வந்து சேர்ந்தார். கற்பூர ஹாரத்தி நடந்தபொழுது உண்டான அசரீரிச் சொற்கள் அவரது செவிகளைவிட்டு அகலாமல் ஒலித்துக் கொண்டே இருந்ததுபோல அவர் உணர்ந்தார். “கொஞ்சம் முன்னைப்பின்னை எல்லாம் சரிப்பட்டுப் போகும்’ என்றசொல் தமக்காக உத்தேசிக்கப்பட்டதாய் இருக்குமா? அப்படியானால், தமக்கு விமோசன காலம் ஏற்படுமா, அப்படி ஏற்படுவதானால், பழைய மனிதர்கள் எல்லோரும் ஒன்றுகூடிப் பழைய நிலைமை யிலும் பழைய பதவியிலும் அல்லவா இருக்க வேண்டும். அவ்வளவு தூரம், எல்லாம் ஒழுங்குக்கு வரப் போகிறதா என்று திவான் சாமியார் தனக்குள் எண்ணமிட்டபடி கோவிலைவிட்டு வெளியேறினார். ஆனாலும் அவ்வாறு அன்றைய தினம் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்தபிறகு அவரது மனம் தலை யெடாமல் அதை அழுத்திக் கொண்டிருந்த மலைபோன்ற துயரச் சுமையின் பெரும் பாகமும் குறைந்து போனதாய்த் தோன்றியது. ஒருவித நம்பிக்கையும், குதுரகலமும் மனத்தில் தாமாக ஊற்றெடுத்துப் பொங்கியபடி இருந்தன. அவரது தேகம் அடிக்கடி மயிர்ச் சிலிப்பையடைந்து கொண்டிருந்தது. அவரது வலது கண், வலது புஜம் முதலிய அங்கங்கள் துடித்தபடி இருந்தன. அத்தகைய இன்பகரமான நிலைமையில் சாமியார்கள் இருவரும் வெளியே வந்து சிறிது தூரத்திற்கப்பால் காணப்பட்ட உன்னதமான பெரிய சத்திரத்தை அடைந்து அதன் திண்ணையில் உட்கார்ந்து கொண்டனர். அந்தச் சத்திரம் சிறிது காலத்திற்கு முன்பே புதிதாய்க் கட்டப்பட்டதாகத் தோன்றியது. திண்ணைக் கடுத்த சுவரில் வாசற்படிக்குமேல் பக்கத்தில், “முதலியார் சத்திரம்” என்ற எழுத்துக்கள் வெள்ளைச் சலவைக்கல்லில் செதுக்கப்பட்டு தக்க ரேக்குகள் பதிக்கப்பெற்றிருந்தன. குளிர்ச்சிக்காகவும் நிழலுக்காகவும் திண்ணையோரமெல்லாம் தென்னம் பிள்ளைகளும், வாதா மரங்களும், பூச்செடிகளும் ஏராளமாக வைத்துப் பயிராக்கப் பட்டிருந்தன. திண்ணை சன்னகாரையால் கண்ணாடிபோல மெருகு கொடுக்கப் பட்டிருந்தது. ஆகையால், குளிர்ச்சியான நிழலில் அந்தத் திண்ணையின் மேல் உட்கார்ந்தது பரதேசிகள் இருவருக்கும்