பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ԱՅ) சுவடி எண் பக்கம் தேதி ஊர் குறிப்பு 5-99 18 5-1892 சாலுவநாயக்கன்பட்டணம் 5 21 18, 19– 5–1829 TH 5-21 20– 5- 18 2 பட்டுக்கோட்டை 5–21 2I- 5 - 1822 முக்தாம்பாபுரம் சத்திரம் சரபோஜி மன்னர் காசியாத்திரைக்குப் புறப்படுவதற்கு முன்னர்த் தம் ஒரே மகனாகிய சிவாஜியை அரசியலில் பழக்குவதற்காகப் பட்டாபிஷேகம் செய்து, ரெஸிடெண்டு முதலியவர்களிடம் இதனை அறிவித்துத் தாம் காசி யாத்திரை முடித்துத் திரும்புகிறவரையிலும் சிறப்பாக விழாக்கள் எவ்வெவை எப்படி நடக்க வேண்டுமோ அவ்வவற்றை நடத்துவதற்காக உத்தரவு அளித்துக் காசி யாத்திரை புறப்பட்டுச் சென்றார். இதனால் மன்னர் தங்கிய முகாம்களுக்கு எழுதி ஒவ்வொரு சிறப்பு நிகழ்ச்சிக்கும் உத்தரவு வாங்க வேண்டிய தொல்லை நீங்கித் தாமாகவே எல்லாக் காரியங்களும் நிறை வேறும் நிலை உண்டாயிற்று. இத்தகு எளிய நிலையை உண்டாக்குவதற்கு உரியவண்ணம் பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு': 1. நவராத்திரி முதலிய எல்லாப் பண்டிகைகளும் ஆயுத பூஜை விஜயதசமி சீமோல்லங்கணம் வகையறா உற்சவங்கள் நம்முடைய குழந்தை யின் மூலமாக வழக்கப்படி நடத்தவேண்டும். நவராத்திரியின் பண்டிகையும் ஆயுதப்ரகூடிாளனம் பூஜையும் சீமோல்லங் கணமும் இதற்கு ரெஸிடெண்டு வந்து பின்பு எல்லாவற்றையும் நிறைவு செய்தல் வேண்டும். 2. சிலங்கண சாவடியிலிருந்து அரண்மனைக்குத் திரும்பும்பொழுது ரெஸிடெண்டு சாயேப் எங்கள் குழந்தையோடு இரதத்தில் உட்கார்ந்து அரண்மனைக்குக் கொண்டுவந்து சேர்ப்பிக்க வேண்டும். இப்பண்டிகையை முன்னிட்டு இனாம் வகையறா வழக்கப்படி சேர வேண்டியவர்களுக்குக் கொடுக்கலாம். - 3. தீபாவளி முதல் எல்லாப் பண்டிகைகளும் பாபுவிஜ அரண்மனை யிலுள்ள சுவாமிகளுக்கு மகோற்சவம் புண்ணிய காலத்தில் வழக்கப்படி தான தருமங்களை நடத்தலாம். - 4. சி. செள. சைதம்பா பாய் சாயேப் மா. ரீ. ஆவுசாஹேப் ஐந்து மாப்பிள்ளைகள் சி. செள. ஐந்துவர்க்கம் அமணி.ராஜே ஐந்து குழந்தைகள் இவர்களுடைய மொயின் தானதர்மங்கள் வகையறா ஒன்றும் குறைவில்லாமல் வழக்கப்படி நடக்க வேண்டும். 17. 8-66 முதல் 88 முடிய 7.642 முதல் 357 முடிய