பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 13 மேலும் உடன் யாத்திரை சென்றோருள் மூவர் இறந்தனர் என்று காசியினின்று எழுதிய 12-7-1821ஆம் நாளிட்ட செய்திக் குறிப்பிலிருந்து" அறியப்பெறும். அது பின்வருமாறு : 12-7-1821 மு. காசி : கயையை விட்டுத் தாரேணி என்னும் ஊருக்கு வருகையில், நல்ல பலசாலியாயிருந்த வழி நடந்து வருகையில் வெய்யிலின் வெப்பம் பட்டு இருந்தாற் போலிருந்து ஸர்க்காரின் ஊழியர்கள் 3 பேர் இறந்தார்கள்." - மங்களகிரி பெஜவாடாவில் தங்கியபொழுது 20-11-1820இல்’அ எழுதிய கடிதத் தினின்று மங்களகிரியைப் பற்றிய செய்தி தெரிகின்றது. மங்களகிரியில் பானக நரசிம்மசுவாமி கோயில் ' என்ற ஒரு திருமால்கோயில் இருக்கிறது. அங்குத் திருமாலுக்குச் சங்கினில் ' பானகம் " நிவேதிப்பர். இதற்காக வலம்புரிச்சங்கு ஒன்று கொடுக்கவேண்டும் என்று சரபோஜி நினைத்தார். தஞ்சை அரண்மனை சந்திரமெளலிசுவரசுவாமி அறை, பிரதாபராமசுவாமி மகால், இளைய ஆவுசாகேப் இடம் ஆகிய இடங்களில் இருக்கக்கூடிய வலம்புரிச்சங்குகளில் பெரியதாக எடுத்துத் தங்கத் தகட்டினால் அச்சங்கினை முடிப் பஞ்சரத்னத்தின் கொத்தைக்கட்டி ஹாஜாருடைய பெயரையும் எழுதி மங்களகிரிக்கு அனுப்பி வைத்து முகாமுக்குத் தெரிவிக்க வேண்டியது என்று ஆணை பிறப்பித்தார். அதன்படிக்கு வலம்புரிச்சங்கு அனுப்பப்பெற்றிருத்தல் கூடும் என்பது உறுதி.கே திருக்காளத்தி 25-7-1821ஆம் தேதியிட்ட எழுத்துச் சான்றில்" திருக்காளத்தியில் நிகழ்ந்த தொரு செய்தி காணப்படுகிறது. திருக்காளத்தியில் இறைவனை வழிபடுவதற்கு மன்னர் சரபோஜி திருக் கோயிலுக்குச் சென்றார். செல்லுங்கால் மன்னரது தகுதிக்கேற்ப ஆயுதங் களைப் பரிவாரங்கள் ஏந்திச் சென்றனர். திருக்காளத்தி சமீன்தார் ஆயுதங் ஏந்திக் கோயிலுக்குள் செல்லக் கூடாதென்று தடுத்தார். தாம் செய்யும் வழிபாடு வீணாதல் கூடாதென்ற கருத்துடையராய மன்னர் தம் நிலையினின்று தாழ்தற்கு மனம் ஒருப்படாது, ஆயுதமின்றிச் செல்லுதல் தம் பெருமைக்கொவ்வாது என்று கருதி, இறைவனுக்கு வழிபாடாற்றாது சென்று விட்டார். அப்பொழுதே ஆயுதத்துடன் சென்று சுவாமி தரிசனம் 23, 5–7 24, 125 23.அ. 5-111, 115, 116 23ஆ. சரபோஜியின் பெயர் பொறித்த வலம்புரிச்சங்கு இருக்கிறதா என்று மும்முறை எழுதியும் மங்களகிரியினின்று மறுமொழி வரவில்லை 24, 5-13?, 18% Ho --- --