பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 வராகப்பையா ஆணை பிறப்பித்துள்ளார். இதனால் எள்ளுப் பயிரிடுபவருக்கு ; வாரம் என்பது உறுதி. கரும்பு சாகுபடி செய்யின் அதனைப் பணக் குத்தகைக்கு விடுவதும் பழக்கம். இதற்கு, " சந்த்யா மண்டபம் படுகை மேல் கரும்பு விளைந்துள்ளது. அந்தப் புறக்குடி ராமசாமி என்பவன் 45 ரூபாய்க்குக் குத்தகைக்கு ஒரு வாரத்துக்குள் விளம்பரம் செய்ய வேண்டியது. அதற்குக் குத்தகை அதிகம் பேச வந்தால் அதையும் எழுதி அனுப்புவது' என்பது சான்றாகும். செக்கு வரி எண்ணெய் செக்கு நாலு இடங்களில் போட்டு அதற்கு வேண்டிய சர்க்கார் கிஸ்தி செலுத்திவருவேன்' என்ற குறிப்பினால் செக்குவரி விதிக்கப்பெற்றமை தெரியவருகிறது. வாண வியாபாரம் வாண வேடிக்கை திருக்கோயில் திருவிழாக்களில் பெரும்பான்மை. அதற்காக வாணங்களை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரி 10 பணத்துக்கு 13. பணம் சர்க்காருக்குக் கொடுக்கவேண்டும். " பொட்டிலுப்பு" க்கு மனு 1 க்கு 1; பணம் தீர்வை கொடுக்கவேண்டும் என்று ஒரு ஆவணம் கூறுகிறது. வீட்டு வரி " " . ஒருவர் வீடு கட்டிக்கொண்டு குடியிருந்தாலும் அவ்வீட்டுக்குச் சிறிது தீர்வை விதிக்கப்படும். - * ' எமுன்ாம்பாபுரம் சத்திரம் ஊழியன் - குயவன் லகஷ்மணன் எழுதிக் கொண்டது. நான் வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன் என்றதற்கு, "தீர்வை இல்லாமல் இருக்கக் கூடாது. சுவல்ப தீர்வை கொடுத்துவரவேண்டும்" என்றமையால்"அ சொந்தவீடு கட்டிக்கொண்டு குடியிருப்பினும் ஒரு சிறு தொகை வரியாகச் செலுத்த வேண்டியிருந்தது என்பது பெறப்படுகிறது. இது "மனை வரி' யாகலாம். அகழி குத்தகை ராஜ்யம் போனபிறகு அரண் பாதுகாக்க வேண்டிய நிலை இல்லாது ஒழிந்தது. ஆகவே அகழியும் சிறிது சிறிதாகத் துார்ந்து போதல் எதிர்பார்க்கக் கூடியதே. ஒருவர் கி. பி. 1807இல் அகழியில் பரங்கி பயிரிட்டு 5 இல் ஒரு பங்கு தந்தார் ஆதல் வேண்டும்". 53, 12-126 54. ச. ம. மோ, த. 2-11 55. ச. ம. மோ. த. 6-11 55.அ. ச. ம. மோ, த. 5.18 56, 4–65 19