பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 - அமர்சி ங்கர் இவர் 7-4-1787 பராபவ பங்குனி மாதம் 28ஆம் நாள் சனிக்கிழமை பட்டம் எ ய்தினார்.' மனைவியர் : கி. பி. 1776இல் இவருக்குக் கோவிந்தராவ்காடேராவின் மகள் கிருஷ்ணம்மா திருமணம் செய்விக்கப்பெற்றார். இவரது இரண்டாவது மனைவி பார்வதிபாயி எனப்பெறுவர். இவர்க்குப் பவானிபாய் என்ற மனைவி யும் இருந்தார்." பிறப்பு : வர் திருமணம் செய்து கொள்ளாத மனைவியின் மகன் ஆகையால் இவர் மகனாகக் கருதப்படமாட்டார் என்பது ஒரு வாதமாகக் கூறப்பட்டு வந்தது." அறங்கள் : இவர் அரசர் ஆனதும் கி. பி. 1787 முதற்கொண்டு வைத்தீசுவரன் கோயிலுக்கு ஆண்டுதோறும் 5400 சக்கரம் கொடுத்துவந்த தாகத் தெரிகிறது ; அநந்தய்யங்கார் என்பவருக்குத் திருமங்கலக்குடியில் வேலி 16 மா தானம் செய்தார் : வெங்கட தீகூகிதர் என்பவருக்குத் திருவையாற்றில் வீடு தானம் செய்தார் ; பெருமாள் நாயிக் என்பவருக்கு 2நடகாட்டாங்குடியில் 2 வேலி இனாம் அளித்தார்." மிராசுதார்களுக்கு 40 வாரம் உயர்த்தியதற்கு அரண்மனைக்கு மேல்வாரம் நஷ்டம் ' என்ற ஒரு குறிப்பு உள்ளது." 40 வாரம் என்பது 100 கலம் கண்டுமுதலாயின் 40 கலம் மிராசுதார் களுக்கு என்று பொருள்படும். அரசங்க வரவு ' என்ற தலைப்பில் குடிவாரம் 2 என்றும் மேல்வாரம் ஐ என்றும் கூறப்பட்டது. ஆதாவது 100இல் மேல்வாரம் 60 ஆகிறது. மிராசுதார்களுக்கு இந்த 60இல் 40 என்று கொண்டால் முன்னே 60இல் 40 அவர்களுக்கு இல்லை என்றும் இப்பொழுது அவர்களுக்கு அளித்தமையின் சர்க்காருக்கு நஷ்டம் என்றும் தெரியவருகிறது. இங்ங்னம் மிராசுதார்களுக்குச் சலுகை தந்த இதே சமயத்தில் குடிவாரதாரர்களுக்கும் சலுகை தந்ததாகத் தெரிகிறது. ' 40 கலம் வாரத்துக்குக் கம்மியுள்ள ஊர்களுக்கு 40 கலம் வாரம் செய்து" என்றமை இதனை வலியுறுத்தும். 71. 8-27 །། 72, 8–227 73. ¥Ғ. LL, மோ. தி. 18-11 74. சி மி. மோ. தி. 12-78 75. 5–618. 76. 9-178 77. 3-166 78. 3-166 79. 6-94 8O, 2-298