பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

371 இந்நாளில் கல்வெட்டுக்களைப் படியெடுத்தலில் வல்லுநர்கள் சிலர் உள்ளனர். அங்ங்னமே கி. பி. 1845இல் ஒருவர் இருந்தார். அவர் பெயர் திருவேங்கட அய்யங்கார் என்பதாகும். சித்திரக்காரர் கோவிந்தசாமி மேஸ்திரியின் மூலம் திருச்சிராப்பள்ளி திருவேங்கடத்தையங்கார் - இவரிடம் கல்லில் எழுத்துக்கள் எழுதிக் காகிதத் தில் அச்சடிக்கும் வேலையைக் கற்றுக்கொள்ள மேற்கண்ட அய்யங்காருக்கு 80 சக்கரம் ' என்றமையால் கல்லில் எழுதப்பெற்றிருந்த எழுத்துக்களைக் காகிதத்தில் பதிய வைத்துப் படிக்கிற கலையை அறிந்தவர் இருந்தனராதல் கூடும். சிலாலிகித அட்டலிபி சுப்பையா என்றொருவர் இருந்தார். அவர் எட்டு வகையான மொழிகளில் எழுதப்படும் எழுத்துக்களைப் படிக்கும் திறனுடையராக இருந்தார் எனவும் தெரிகிறது." 158. ச. ம. மோ, த. 25-89 169, 2–279