பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

407 துபாசி பச்சப்ப முதலியாரிடம் ” கொடுக்கப்பட்டது என்ற குறிப்பால்' கம்பெனி செய்யும் தொழில்கள் சில பச்சையப்ப முதலியாரின் மேற்பார் வையில் இருந்தன என்று அறியப்பெறும். வேலப்ப முதலி: இவர் தூரியன் பரங்கியின் துபாஷியாவர். இவரைப் பற்றி 1797க்குரிய குறிப்புக் காணப்பெறுகிறது. இவர் தங்குவதற்கு வீடு தஞ்சையில் கட்டப்பெற்றதாதல் வேண்டும்." - முருகப்ப முதலி : 'கி. பி. 1797 மொழி பெயர்ப்பாளர் முருகப்ப முதலி என்று ஒருவர் குறிப்பிடப்பெறுகிறார். இவர் 1797 ஜில்ஹஜ் 17ஆம் தேதி இறந்தனராதல் வேண்டும். இவருக்கு மாத ஊதியம் 60 சக்கரம். இவர் இறந்துவிட்டபடியால் இவர் மகன் அய்யாசாமி முதலி தனக்குக் கொடுக்குமாறு விண்ணப்பம் செய்து கொண்டார்." இவர் அமர்சிங்கிடம் துபாஷியாக இருந்தனர் போலும். ராமா நாயிக் : இவர் கி. பி. 1782இல் குறிக்கப்பெறுகிறார். இவர் அரசரின் துபாஷியாதல் கூடும். " காகத் துபாஷி ராமா நாயக் இடம் 200 வராகன் கொடுக்கப்பட்டிருக்கிறது ' என்பது இவரைப்பற்றிய குறிப்பு." கவர்னர் மேஜை சாமான்கள் வாங்குவதற் வெங்கடாசல முதலி - 8-5-1787இல் திரியம்பகஸாம்பாஜி என்ற தம் வக்கீலுக்கு அமர்சிங் எழுதிய கடிதத்தில் வெங்கடாசல முதலியும் அவர் தம்பி செங்கல்வராய முதலியும் குறிக்கப்பெறுகின்றனர்." வெங்கடாசல முதலி பெத்தோர் அ என்பவரின் துபாஷி என்று குறிக்கப்பெறுகிறார். வேறோ ரிடத்தில் கர்னலுடைய துபாஷி எனப்பெறுகிறார். இவரிடத்தில் 18,800 வராகனுக்கு இவருடைய தம்பியால் 3 ஹாண்டிகளும், தமிழில் 2 கடிதங்களும் அனுப்பப்பெற்றன என்று தெரியவருகிறது. இவர்கள் இருவரும் கம்பெனியா ருடைய துபாஷிகள் ஆகலாம். கிருஷ்ணசாமி : கி. பி. 1791இல் இவர் குறிக்கப்பெறுகிறார். ஒருநாள் அமர்சிங்கின் மனைவியர் அரண்மனைக் கோவிலுக்குச் சென்றபொழுது ஒரு கலகம் நடந்தது. அன்று நண்பகல் " பாதரி சாகேப் ” வந்தார். அப்போது துபாசி கிருஷ்ண சாமி சிவ ராவ் ஆகியோர் வந்திருந்தனர். இக்கிருஷ்ணசாமி அரண்மனைக்குரிய துபாசியாவர் என்று தோன்றுகிறது." in இத்தகைய துபாஷிகளாயிருந்தவர்கள் அரசுக்கும் கும்பினிக்கும் இடையே செயல்பட்டனர் என்றும், அவர்கள் மிக்க செல்வாக்குப் பொருந்தி பிருந்தனர் என்றும் அறியப்பெறும். 56 ச. ம. மோ. த. 6-7 87. ச. ம. மோ. த. 20-1 88. ச. ம. யோ. த. 20-2 89. ச. ம. மோ, த. 8-29, 30. 3–272 904). Peter (?) 91, 3–281 92. 4-888.