பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 வலங்கை இடங்கைப் பூசல் இந்நாட்டில் சாதிகள் பல; அச்சாதிகள் சில ஒரு கூட்டமாகவும், எஞ்சியவை வேறு ஒரு கூட்டமாகவும் இருந்துவந்தன. அச்சாதிகளைச் சேர்ந்தவர்களுக்குள் வேறுபாட்டுணர்ச்சி தோன்றுங்கால் அரசனிடத்தில் முறையிடுவது எதிர்பார்த்தற்குரியதே. அங்ங்னம் முறையிடுங்கால் அரசனது வலது பக்கத்தில் இருந்தவர் வலங்கையர் என்றும், இடது பக்கத்தில் இருந்தவர் இடங்கையர் என்றும் கூறப்பெற்றனர் என்பர்." இப்பிரிவுகளின் தோற்றம்பற்றிப் பல வேறு கருத்துக்கள் உண்டு. கரிகாற்சோழர் இரண்டு பிரிவுகளாக மக்களைப் பிரித்தார் என்றும், ஒவ்வொரு பிரிவிலும் 98 சாதியினரை அமைத்தார் என்றும், ஒரு சாரார் கூறுவர். காச்யபர் ஒரு வேள்வி செய்தார் என்றும், அதனை அழிக்க வந்த அசுரர்களை அழித்தற்பொருட்டு அவருடைய யாககுண்டத்தினின்று இடங்கைச் சாதியினர் தொண்ணுற்று எட்டுப் பிரிவினர் தோன்றினர் என்றும், சக்ரவர்த்தி அந்திமான் வேள்வி செய்தவர்களைச் சிறப்பித்து ஒரு பார்ப்பனச் சேரிக்குக் கொண்டுபோய் விட்டனன் என்றும், அவர்கள் திருவெள்ளறை முதலாகிய ஊர்களில் தங்கினர் என்றும், ஒரு கல்வெட்டில் விரிவாகக் காணப்பெறும்.8 1. A. R. E for 1921, Part II, Para 47 A. R. E for 1921, Part 11, Para 47; Page 33 & 34, Chingleput District Manual quoted in the A. R. E. "Karikala Chola divided the people into these two parties assigning 98 tribes to each and appropriating to their use distributed flags and musical instruments for use at festivals and functions” - 3. A. R. E for 1913 Part II, Para 39