பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O சிற்பமும் ஓவியமும் அழகுக் கலைகளுள் சிற்பமும் ஓவியமும் சாதாரண மக்களையும் ஈர்க்கும் வலிமை வாய்ந்தவை. ஆகவே சிற்ப ஒவியத்துறைகளிலேயும் மராட்டிய மன்னர்கள் சிறிது எண்ணத்தைச் செலுத்தி ஓரளவு சாதனை புரிந்துள்ளனர் என்னலாம். சரபோஜியின் சலவைக்கல் சிற்பம் இந்நாளில் தஞ்சைக் கலைக்கூடம் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியக மாகத் திகழ்கிறது. அதில் முன்னாளில் ஜீராத்கானா என்ற பெயர் வாய்ந்ததும் ஆயுதசாலையாகத் திகழ்ந்ததுமான இடத்தையொட்டி, முன்ளிைல் நாயக்க மன்னரது அரசவை ( Durbar Hall ) ஆக இருந்த இடத்தில், இரண்டாம் சரபோஜியின் சலவைக்கல் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. 21-1-1828இல் பகல் 10மணிக்கு ரெஸிடெண்டும் அவருடைய அளிஸ்டெண்டு தரடிசாயேயும், பிரதான கலெக்டர் காட்டனும், இஞ்சினியரும் அவருடைய இன்னொரு துரையும் அரண்மனைக்கு வந்தார்கள்...... அவர்கள் போகும்பொழுது ஜீராத்கானா (ஆயுதசாலையில்) உள்ள சரபோஜி ராஜா வின் பிம்பத்தைப் பார்த்துப் போனார்கள்' என்று ஒரு குறிப்புள்ளது. இதனால் கி. பி. 1823க்கு முன்னதாகவே இந்தச் சலவைக்கல் உருவம் அமைக்கப் பெற்றமை தெளிவு. ". 30-3-1926இல் பிஷப் ஹீபர் என்ற பாதிரியார் இரண்டாம் சரபோஜியை ஆாண்மனையில் பார்த்துப் பேசினார். அவரிடம் விடைபெற்றுக்கொண்டு 1 3-205, 318