பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 செல்லுங்கால் ஃப்ளாக்ஸ்மன் என்பார் செய்த சரபோஜியின் சலவைக்கல் உருவைக் கண்டு சென்றார் எனத் தெரிகிறது. ‘பிஷப் ஹீபர் (Bishop Heber) அவர்களின் இறுதி நாட்கள்' என்ற நூலில் இவ்வுருவம் ஃபளாக் ஸ்மன் செய்தார்'என்றும் கூறியிருக்கத் "தஞ்சை மாவட்ட கெஜட்டியர் " என்ற நூலில் சரபோஜியின் உருவம் 'சன் த்ரே' (Chantay) என்பவரால் அமைக்கப் பெற்றது என்று காணப்பெறுகிறது. கெஜட்டியர் எழுதியவர் சன்த்ரேயின் பெயரை எங்ங்னம் அறிந்தார் என்று தெரிய வாய்ப்பில்லை. ஃப்ளாக்ஸ்மன் பற்றிய நூலொன்றில், கி. பி. 1803இல் 1200 மதிப்பில் முழு அளவு உருவம் ஒன்று சலவைக்கல்லில் அமைத்துத் தருமாறு இந்தியாவிலிருந்து ஃப்ளாக்ஸ்மன் பணிக்கப்பெற்றார் என்றும், சரபோஜி லண்டனுக்குச் செல்லவில்லை என்றாலும், " ஸ்வார்ஷ் பாதிரியார் மரணப் படுக்கைக் காட்சி "யைச் சித்தரிக்கும் சிற்பம் அவரது மனத்தைக் கவர்ந்தமையால் தன் முழு அளவு சிற்பம் செய்யச் செய்தார் என்றும் கூறப்பெற்றுள்ளது. ஜான் ஃப்ளாக்ஸ்மன் என்ற நூலில் பக்கம் 22 "முதல். 24 முடிய அவருடைய வாழ்க்கை வரலாற்றில்'க சில குறிப்புக்கள் காலமுறைப்படி கொடுக்கப் பெற்றுள்ளன. அதில் 1807க்குரிய குறிப்பு : -

  • The tomb for the Rajah of Tanjore (Calcutta) is erected” --

என்று காணப்படுகிறது. இதனால் 1807இல் ஸ்வார்ஷ் பாதிரியாருடைய 2. “When we took our leave, his (Sarabhoji's) minister shewed us a noble statue of the Rajah by Flaxman which stands in the Hall which was used by the ancient Hindu Court before the conquest by the Marathas “– Page 166, Last Days of Bishop Heber by Thomas Robinson (1829) 3. , The former (Nayak Durbar Hall) contains a remarkable slab of gneiss on whom the throne used probably placed but which now occupied by a fine statue of Sarabhoji by chantray" - page 272, District Gazateer Tanjore by F. R. Hemingway (1906). 4. ... One of the earliest commissions for a lifesize statue, costing £1,200, came from India in 1803, from a client who wished to erect an image of himself during his own lifetime in his palace. Raja Sarfoji (Sarobhoji) of Tanjore never visited England, and presumably selected Flaxman because he liked his monument to the Reverend Christian Frederick Schwartz (Plate 205). Flaxman must have been sent an Indian miniature so that the features, as well as the unusual hat and dress, would be correct (Plate 259); the miniature had presumably also been used for the monument. Flaxman carved the figure of the Raja with his hands clasped in a gesture of reverence creating an imposing image when erected on its high pedestal in a private hall of the Palace” – P. 181, chapter VIII, Portraits - John Flaxman 1755 - 1826 - Sculpture Illustrator Designer - David Irwin - London (1979). 4.அ. (இக்கட்டுரையின் இறுதியிற் காண்க. )