பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 காம்பீர்ய விநயாதி ஸத்குண ரத்ன ரத்னாகர ஸ்கல கலா ப்ரவீண ப்ரதிபகஷ பகூடிகண்டன. தகூடி ஸ்த்ரகூடின ஸ்தாபக சோள தரணி பாலக தஞ்சபுரா தீஸ்வர கூடித்திரிய குலவரிஷ்ட ஸத்கீர்த்தி மந்த்த பூரீமந்த்த மகாராஜ சத்ரபதி பூலோக தேவேந்திர சிவாஜிந்திர ராஜே சாஹேப் அவர்களுடைய உத்தரவின் பேரில். ' இங்ங்னம் உள்ள பல விருதுகளும் இவர்க்கு மட்டுமன்றி எல்லாருக்கும் கொடுக்கப்பெற்றுவந்த அட்டவணை விருதுகளாக இருத்தல்கூடும் என்று கருதலாம். எங்ங்னமாயினும் நியமன உத்தரவுகளுள் ஒன்று கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. எச்சரிக்கை : இவர் பட்டத்துக்கு வந்தபிறகு வெள்ளையர் கருத்துக்கு ஏற்ப நடந்துகொள்ளவில்லை. அதிகாரிகளும் சரிவர நடந்துகொள்ளவில்லை போலும். ஆகவே 1838இல் அமைச்சர்கட்கு ரெஸிடெண்டு ஒரு கடிதம் எழுதியுள்ளார்." "மகாராசாவின் நடத்தை கேட்டு மிகவும் ஆயாசப்படுகிறோம்" என்று 1837இல் ரெசிடெண்டுக்கு கவர்ன்மெண்ட் செகரட்டரி எழுதியுள்ளார்; அன்றியும் " நியாயம் தவறினாலும் ஆசிருதர்களுக்குத் துன்புறுத்தினாலும் அடம் செய்தாலும் ஒப்பந்தப்படிக்கு அதிகாரம். கவர்ன்மெண்டு எடுத்துக் கொள்ளும் ' என்று அக்கடிதத்தில் அச்சுறுத்தப் பட்டுள்ளது." கி. பி. 1848இல் ரெஸிடெண்டு தஞ்சாவூரை விட்டுப் போகுமுன், தன்னைச் சிவாஜி அலகஷ்யப்படுத்தியதைச் சுட்டிக்காட்டி, மாதுஸாமி மாடிக் என்பவரை அரசர் நம்பிக் கெட்டுப்போகக்கூடாது என்றும் அரசர் த்ம் தாயாரின் நகைகளை அடகு வைத்துக் கடன்காரர் ஆகக்கூடாது என்றும் கூறி ஸர்கேல் தேவாஜிராவ் வராகப்பையாவை நீக்குவதற்கு முயல்வதையும் சுட்டிக்காட்டி எச்சரித்திருக்கிறார்." = இறப்பு : சிவாஜி 1855 அக்டோபர் மாதம் 25ஆம் நாள் திங்கட்கிழமை காலை 7 நாழிகைக்கு இறந்துபோனார்.' - இரண்டாம் சிவாஜியின் மனைவியர் சென்னைப்பட்டணம் உச்சநீதி மன்றத்தில் ( Supreme Court) காமாட்சியம்பாபாயி சாயேப் கும்பினியாரையும் மற்ற பாயிமார்களையும் பிரதி வாதிகளாக்கி 1857இல் ஒரு வழக்குத் தொடுத்தார். நார்ட்டன் என்பார் வழக்கறிஞர். அவர் கையொப்பம் இட்டுள்ள 20-4-1857 தேதி இட்ட ஓராவணத்தில் பிற்கண்ட பாயிமார் பெயர்கள் உள்ளன: 108. ச. ம. மோ, த. 10-5 - 109. ச. ம. மோ. க. 10-4 110. ச. ம. மோ. த. 6-29, 30, 31 111 ச. ம. மோ. தி. 4-28, 1. 2–231, 232