பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 நகரம் தருமராஜ திவான் செட்டிப்பிள்ளைகள் தருமம், பிராமண போஜனம், சிவ பிரதிஷ்டை பூஜை, நந்தவனம், தருமசாலை வகையறாக்கள் சரிவர நடந்து வருகின்றன. மகாராஜாவின் தருமம் மாத்ருஸ்தானமாக நினைத்து நடத்துகிறோம். இப்படிக்கு, சிவஸ்மரணம், ஆசீர்வாதம் " " - இக்கடிதத்தினின்று காசியில் திருப்பனந்தாள் காசி மடத்துச் சார்பில் பலருடைய தருமங்கள் ஏற்று நடைபெற்று வந்தன என்றும், தஞ்சை மராட்டிய மன்னர் நிறுவிய அறங்களைக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்கலாயின்ர் என்றும் தெரியவரும். . . . . . காசிமடத்து அதிபர்கள் காசியிலிருந்து சிறந்த நூல்களைப்படி எடுக்கச் செய்தும் நூல்களை விலைக்கு வாங்கியும் தஞ்சைக்கு அனுப்புவது வழக்கம். அவற்றுடன் கங்கா தீர்த்தமும், கங்கோத்ரியினின்று தீர்த்தக்காவடிகளும் கொணரச் செய்து தஞ்சைக்கு அனுப்புவர். இவை பின்வரும் மோடி ஆவணத் தமிழாக்கக் குறிப்புக்களால் அறியப்றுெம்:- - **.* 11805 காசியிலிருக்கும் கிரந்தங்களை எழுதியனுப்பத் திருப்பனந்தாள் காசித்தம்பிரானிடம் ரூ. 1000 அனுப்பினதற்குத் தம்பிரான் பதில் கடிதம்" 1842. காசித்தம்பிரான் மூலம் புத்தகங்கள் வாங்கினது ஜாபிதாபடிக்கு ருக்சாகா சம்மிதா பாஷியம், திரி தீய சதுர்த்த அஷ்டகம் 2, சப்தம அஷ்டக சம்பூர்ணம்; ருக்வேத பஞ்சக பாஷ்யம், பிரதம துவிதீய பஞ்சகம்; அதர்வன பிராஹ்மண பூர்வோத்தர காண்டம்; நிர்ணய சிந்து - பிரதம திவிதீய திரிதிய பரிச்சேதம்"

    • 1823: கங்கேர்த்ரியின் காவடிகள் 4-திருப்பனந்தாள் காசித்தம்பிரான் மூலம் சர்க்காருக்கு அனுப்பித்த வகையில் காசிக் காவடிகள் கொண்டு வந்த ஆத்மாராம் வகையறா ஆட்கள் 4 பேருக்கு இனாம் கம்பெனி ரூ. 100."

அந்நாளில் காசிமடத்து அதிபர்களுக்கு ஒரு வக்கீல் இருந்தார். அவர் பெயர் நாகோஜி மல்ஹார் என்பது பின்வரும் குறிப்பால்' அறியப்பெறும்: o 1829: பூநீகாசி கூேடித்ரத்திலிருந்து காசித்தம்பிரான் மூலம் கங்கையின் காவடிகளும் புத்தகங்களும் வாங்கிக் கொண்டு வந்ததற்குத் தம்பிரானுடைய வக்கில் நாகோஜி மல்ஹார் இடம் கொடுத்தது; புத்தகத்துக்கு ரூ. 299, கங்கையைக் கொண்டுவர 113." 25, 2-118 (பதில் கடிதம் திரு. ஆர். ஜயராமன் அவர்கள் எழுதிய சரஸ்வதிமகால் என்ற நூலில் வக்கம் 28இல் அச்சிடப்பெற்றுள்ளது) ==- - 26. ச. ம. மோ. க. -ே17 27. ச. ம. மோ. த. 28.8 * 28. 4-288