பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

429 கி. பி. 1772க்குரிய மோடி ஆவணத் தமிழாக்கத்தில்,"அ. காசி தருமத் துக்குத் திரிலோக்கி மாகாணத்தைச் சேர்ந்த எட்டுக் கிராமங்களும், குறிச்சி, மாகாணத்தில் உக்கடை, தரணி மாகாணத்தில் நலாதபடிஎன்ற கிராமங்களும் விடப்பட்டன என்றும், அவை 82,000 கலம் கண்டுமுதல் ஆகும் என்று தஸ்தாவேஜ- கச்சேரியில்" கண்டுள்ளது என்றும், 1770இல் 22,000 கலமும் 1771இல் 21 ஆயிரம் கலமும் குறைவாக இருந்தன என்றும், இங்ங்ணம் காசி தருமத்துக்குக் குறைவாகக் கொடுத்தால் தருமம் நின்றுவிடும் என்றும், 1772 முதற்கொண்டு 10,000 கலம் தள்ளி 72,000 குத்தகை பெறவேண்டும் என்றும், குடிவாரம் 100க்கு 40 வீதம் கொடுக்கவேண்டும் என்றும் ஆண்டு தோறும் ஸர்க்காருக்குக் கொடுக்கவேண்டியதாக ஒப்புக்கொண்ட 500 சக்கரம் கொடுக்க வேண்டியதில்லை என்றும் கூறப்பட்டுள்ளன. இதன் கண், 1772: தினப்படிக்காகக் கல்லே குத்தகை காசி கோனார் பண்டாரத் திற்குக் கொடுப்பது" என்றுள்ளது. அதாவது "காசியில் நாடோறும் செய்யவேண்டும் என்று நியமித்த த ரு மங் களு க் கா. க இ க்கு த் த கை வருமானம் கா சி கோனார் பன்ட்ார்த்திட்ம் கொடுப்பது" என்று பொருள்படும். "காசி கோனார் பண்டாரம்" என்றது யார் என்று தெரியவில்லை. இந்தக்கால வட்டத்தில் திருப்பனந்தாள் பூரீ காசிமடத்தின் தலைவராக விளங்கியவர்கள் பூரீ காசிவாசி குமரகுருபர சுவாமிகள் II என்பவர் ஆவர். குமர " என்பது " கோனார் " என்று திரிந்ததாதல் கூடும். எங்ங்னமாயினும் இங்குக் குறிக்கப்பெற்ற திருலோகி வகையறா கிராமங்கள் சில இந்நாளில் திருப்பனந்தாள் காசி மடத்துக்குரியனவாக இருக்கின்றன. = தென்னாட்டிலிருந்து காசிக்குத் தொகைகள் அனுப்ப வேண்டியிருப்பின் அந்நாட்களில் திருப்பனந்தாள் பூநீகாசிமடத்தில் செலுத்தினால் காசி குமார சுவாமி மடத்தில் கொடுக்கப்படும். அதற்கு ஓரளவு தொகை சேர்த்துக் கொடுப்பர். இதனை, காசியில் வசிக்கும் பிராமணர் ராதா மோகனபட் கெளரி மோகனபட் இந்த இருவருக்கும் ரூ. 200 கொண்டு போகும்படி செலவு ரூ. 10 மேற் கொண்டு 100க்கு ரூ. 5 வீதம் ரூ. 10 ஆக ரூ. 220 காசித் தம்பிரானுக்கு அனுப்பியது". - டிை விஷயமாகக் காசியில் வசிக்கும் வியாகரணம் விட்டல் சாஸ்திரிக்கு வித்வத் சம்பாவனை ரூ. 100 கொண்டுபோய்ச் சேர்க்கும் செலவு ரூ. 10 ஆக ரூ. 110 காசித்தம்பிரானுக்கு அனுப்பப்பட்டது”என்ற குறிப்புக்கள்" உணர்த்தும். 28.அ. 5-829 முதல் 884 முடிய 29. அடிக்குறிப்பு 6இல் நிரல் எண் 7. 30. ச. ம. மோ. க. 10-19 * *