பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.38 கும்பகோணம் பெரியமடம் இது கும்பகோணத்தில் உள்ளது ; மிகப்பழமையான மடங்களுள ஒன்று, 16-1-1846இல் கும்பகோணம் பெரியமடம் விசாரணை சுப்பையன் என்பார் ஸர்க்காரில் ஒரு விண்ணப்பம் கொடுத்திருக்கிறார். அந்நாளில் கும்பகோணம் பெரிய மடத்து அதிபர் சாரங்க தேவர் எனப்படுவார். இவர் சர்க்காருக்குத் தெரிவித்து "விஸ்திரமும் " பெற்றுக் கொண்டு பட்டம் ஏற்றார்; பின்னர் மேலே கண்ட சுப்பையன் என்பவருக்குச் " சர்வாதிகாரம்" கொடுத்து அச் செய்தியைச் "சப்கலெக்டர்." அவர்கட்கும்,' அடியார் கூட்டத்துக்கும் தெரிவித்துத் தலயாத்திரை சென்றார். அவ்வமயம் முத்தண்ணா என்பவர் வேறு ஒருவரை இளவரசு ' என்று புரட்டுச் செய்தார். அது சர்க்காருக்குத் தெரிவிக்கப்பட்டது. " ஸர்க்கேல்" அவர்கள் அவர் இளவரசு அல்ல" என்று தீர்ப்புக்கூறிச் சுப்பையனுக்கு அளிக்கப்பெற்ற சர்வாதிகாரத்தை உறுதி செய்தார். இது 1844இல் நடந்தது." . - இதுபற்றிய ஆணையின் படியை விரும்பிச் சுப்பையன் விண்ணப்பம் அனுப்பினார். பெரிய மடத்தைப்பற்றி வேறு செய்திகள் கிடைக்கவில்லை. பிற இடங்களில் மடங்கள். கி. பி. 1776க்குரிய அரசாங்க உத்தரவில் திருவண்ன்ாமலையில் "ஸர்க்காருடைய மடம் " இருப்பதாகவும் அதற்கு அரசர் ( அமர்சிங்கு ) ஸ்பாபதி மூர்த்தியைக் கொடுத்தார் என்றும் பூசை நிவ்ேதனத்துக்காகப் புண்டாரம் வசம் 20 சக்கரம் அளிக்கப்பெற்றதாகவும் கண்டிருக்கிறது." _மன் னார்குடியில் மேரு சுவாமியார் மடம் என்றொரு قندھا இருந்த தாகவும்' அதற்கு 1842இல் பூரீராமநவமிக்கு ரூ. 306-4-0 அளித்ததாகவும்: அறியவருகிறது. தஞ்சாவூரில் கீழ அலங்கத்தில் சிவபூசை மடம் என்றொரு மடம் துளஜா. மகாராஜா அவர்கள் காலத்தில் அருணகிரி, விருபாகூடி தேவர். என்பவருட்ைய தகப்பனாருக்கு அளிக்கப்பெற்றது. இம்மடம் பற்றி ஒரு வழக்கு 77. சிவப்பிரகாசர் தம்பி வேலையர் எழுதிய வீரசிங்காதனபுராணத்தில் இம்மடங்தைப் பற்றிய செய்தியுள்ளது என்பர். புலவர் திரு. அடிக்ளாசிரியர் அவர்கள். தக்கயர் கப் பரணி வாழ்த்துப்பகுதியில் இம்மடம் குறிக்கப்பெறுகிறது. 78. 6-168, 169. 79. 3-168; 7–590. 80. 8-170; சிவாஜியின் ஞானாசிரியர், சமர்த்த ராமதாஸ் சுவாமிகள் தஞ்சைக்கு வந்து திரும்பியபொழுது பீமராஜ், ராகவர், ஆனந்த மெளனி என்ற மூவரைத் தஞ்சையில் விட்டுச் சென்றார். ஆனந்தமெளனியின் மாணாக்கர் மேரு சுவாமி. இவர் மன்னார்குடியில் அமைத்தது.ம்ேரு சுவாமி மடம், 81. 1-162 ---